சம்பளம்தான் பிரச்சினையா? ‘தளபதி 69’ படத்தில் இருந்து தயாரிப்பாளர் விலகியதற்கான காரணம்
Actor Vijay: விஜய் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் தான். விஜயை எப்பொழுது பார்ப்போம் அவருடன் எப்பொழுது புகைப்படம் எடுப்போம் என்ற ஏக்கத்திலேயே விஜயின் ரசிகர்கள் இருந்து வருவது உண்டு. ஆரம்பத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளான விஜய் அந்த விமர்சனத்தில் இருந்து தன்னை விடுவித்து எப்படியாவது இந்த சினிமாவில் ஒரு நல்ல நிலைமையை அடைய வேண்டும் என இன்று வருங்காலத்தில் அரசியலில் கால் பதிக்க காத்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கெல்லாம் அவருடைய தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமே காரணம். அவருடைய சிறு வயதிலிருந்து அவர் பட்ட கஷ்டங்கள் துன்பங்கள் கடின உழைப்புகள் எல்லாவற்றையும் நாம் செய்தித்தாள்களில் மூலமாகவும் இணையதளங்களின் மூலமாகவும் அறிந்திருக்கிறோம். இப்படி நாளுக்கு நாள் விஜய் பற்றி ஏராளமான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. கோட் மற்றும் தனது 69 வது படம் ஆகிய இரு படங்களை முடித்த கையோடு அரசியலில் தனது முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறார் விஜய்.
இதையும் படிங்க: ராஜா போட்ட பாட்டிலேயே ரஜினியின் ஆல்டைம் ஃபேவரைட் இதுதான்!.. அட அது செம பாட்டாச்சே!..
இந்த நிலையில் கோட் படத்திற்கு பிறகு 69 வது படத்தை எச் வினோத் இயக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை என்றாலும் அவர்தான் இயக்கப் போகிறார் என்ற ஒரு கருத்து பரவலாக இருக்கிறது. இந்த நிலையில் முதலில் அந்த படத்தை ஆர்ஆர்ஆர் மூவி தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருந்தார்.
அதன் பிறகு எந்த ஒரு அக்ரிமெண்ட்டும் போடாமல் இந்த படத்தை பற்றி அந்த தயாரிப்பாளர் விளம்பரம் செய்ததால் விஜய் கோவப்பட்டு இந்த தயாரிப்பாளர் வேண்டாம் என்று சொன்னதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் முக்கிய காரணமே விஜயின் சம்பளப் பிரச்சனை தானாம். கோட் திரைப்படத்தில் விஜய் 200 கோடி சம்பளம் பெறுகிறார், அதனால் தனது அடுத்த படமான 69ஆவது படத்தின் 250 கோடி சம்பளத்தை கேட்டாராம், இவ்வளவு சம்பளம் கொடுக்க முடியாது என்ற காரணத்தினால் தான் இந்த படத்தில் இருந்து அந்த தயாரிப்பாளர் விலகியதாக இப்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: ஹீரோக்களுக்கு முக்கியமான ஒன்னு.. அது விஜய்கிட்டதான் இருக்கு! இப்படி சொல்லிட்டாரே சத்யராஜ்