Connect with us

Cinema News

விஜய் என்னிடம் நாலுமுறை அப்படி பண்ணார்… சங்கீதா கிரிஷை சங்கடப்படுத்திய சம்பவம்…

Sangeetha: கிளாமர் ரோலில் நடித்து வந்த சங்கீதா கிரிஷ் தளபதி விஜய் என்னிடம் நான்கு முறை கேட்டும் அதற்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன் என கூறியிருக்கும் விஷயம் வைரலாக பரவி வருகிறது.

தமிழில் ராசிகா என்ற பெயரில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் நடிப்பில் வெளியான பொன்னூஞ்சல் திரைப்படத்தில் தான் முதலில் அறிமுகமானார் சங்கீதா. ஆனால் அந்த படம் சில காரணங்களால் வெளியிடப்படாமலே இருக்கிறது. இதை தொடர்ந்து சங்கீதா மலையாளத்தில் தன்னுடைய கவனத்தை திருப்பினார்.

இதையும் படிங்க: போன இடத்தில் உத்திரவாதம் கொடுத்தாரா விஜய்? கேப்டன் வீட்டில் நடந்தது என்ன?

அதே நேரத்தில் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்தாலும் மிக முக்கிய கதாபாத்திரங்கள் ஆக நடிக்க எந்த படத்திலும் அவருக்கு வாய்ப்பு வரவில்லை. கோலிவுட்டின் பி கிரேட் நாயகியாகவே சங்கீதா வலம் வந்தார். பின்னர் டபுள்ஸ் திரைப்படம் மற்றும் பிதாமகன் திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டிகள் சங்கீதா குறிப்பிட்டு இருக்கும் சில விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது. எனக்கும், விஜய்க்கும் நீண்ட காலமாகவே நட்பு இருக்கிறது. சின்ன வயசுல இருந்து நாங்கள் இருவரும் ஒன்றாக தான் வளர்ந்து வருகிறோம்.

#image_title

எனக்கு அமைதியாக இருக்கும் விஜயை பெரிய அளவில் தெரியாது. கலாட்டா செய்யும் விஜய் தான் என்னுடன் அதிகமாக இருந்தார். நான் கிரிஸை பாடுவதற்கு கலாய்க்கும் போது கூட ரசனை கெட்டவளா இருக்க என என்னை அடிக்கடி கூறுவார். இருந்தும் நான் விஜய்யுடன் எந்த பாடலிலும் நடனம் ஆடவில்லை.

இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு இன்னும் 2 நாளில் அடுத்த சேதி காத்திருக்கு… ஆனால் ஃபீல் பண்ணுவீங்க!..

எனக்கு விஜய்யுடன் தனி பாடலுக்கு நடனமாட நாலுமுறை வாய்ப்பு வந்தது. எல்லா தடவையுமே விஜய் தான் என்னிடம் கேட்பார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்து விடுவேன். ஒரு முறை அவர் மனைவி சங்கீதா என்னிடம் கால் செய்து அவரே கேட்டு ஏன் முடியாது எனக் கூறினாய் எனக் கேட்டார்.

 இல்லப்பா நான் இப்பதான் சினிமாவில் வளர்ந்து கொண்டு வரேன். விஜய் உடன் ஒரு நடனம் ஆடினால் அது பிரபலமாகிடும். பின்னால் என்னால் வளரவே முடியாது ஒரே பாடலுக்கு நடனமாடும் நிலைமை வந்துவிடும். அதனால் தான் முடியாது என கூறினேன். எனக்கே சங்கடமாக தான் இருக்கு அவரிடம் சொல்லி புரிய வையுங்க எனக் கூறிவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top