அதெல்லாம் வேண்டாம்.. இத பண்ணுங்க!. கண்டிஷன் போட்ட விஜய்!.. தளபதி 69 முக்கிய அப்டேட்!..

#image_title
Thalapathy 69: கோட் படத்திற்கு பின் விஜய் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது விஜயின் 69வது திரைப்படமாகும். அதோடு, விஜய் நடிக்கும் கடைசிப்படம் எனவும் சொல்லப்படுகிறது. ஏனெனில், விஜய் அரசியல் தொடர்பான வேலைகளில் இறங்கவிருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி கடந்த மாதம் மாநாடும் நடத்தினார். இந்த மாநாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மேடையில் மிகவும் ஆக்ரோஷமாக பேசினார் விஜய். ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: நயன்தாரா எடுத்த இந்த முடிவுக்கு அந்த நடிகர்தான் காரணமா? அவரே என்ன சொல்லியிருக்காரு பாருங்க
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் விஜய் சினிமாவிற்கே வரமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தேர்தலில் தோல்வியை சந்தித்தால் மீண்டும் சினிமாவுக்கு வருவார் என சிலர் சொல்கிரார்கள்.
விஜயை வைத்து படமெடுக்க பல இயக்குனர்களும் தவம் கிடக்கையில் ஹெச்.வினோத்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சதுரங்க வேட்டை படத்தில் அறிமுகமான ஹெச்.வினோத் அஜித்தை வைத்து நேர்க்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கியவர்.

#image_title
கமலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதாக இருந்து பல மாதங்கள் காத்திருந்தார். ஆனால், அது டிராப் ஆகிவிட தனுஷ் பக்கம் போனார். தனுஷுக்கு விருப்பம் இருந்தாலும் கால்ஷீட் இல்லை. எனவே, விஜயிடம் கதை சொன்னார். அவருக்கு பிடித்திருந்ததால் சம்மதம் சொன்னார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் கட்டப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்கப்பட்டது. அதன்பின் ஹைதராபாத் செல்ல திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால், விஜயை அரசியல்வாதிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதால் அது தொடர்பாக விஜய் தனது கட்சி நிர்வாகிகளை தினமும் சந்தித்து பேசி வருகிறார்.
எனவே, ஹைதராபாத் வேண்டாம். படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்துங்கள் என விஜய் சொல்லிவிட்டாராம். எனவே, இப்போது படப்பிடிப்பு சென்னையிலேயே நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கனத்த இதயத்துடன் இயக்குனர் பாலாவுக்கு… அடுத்த அறிக்கையுடன் வந்த பிரபல நடிகர்..