செந்தூரப்பாண்டியை பார்க்க வந்த தம்பி விஜய்!.. அந்த 10 செகண்ட் கடைசியா பார்த்து கண் கலங்கிட்டாரே!

Published on: December 29, 2023
---Advertisement---

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயங்களில் எல்லாம் விஜய் நேரில் வந்து பார்ப்பாரா என்கிற கேள்வி எழுந்து வந்தது. விஜயகாந்த் மரணித்த செய்தி தெரிந்தும் விஜய் ஒரு ட்வீட் கூட போடலையே என்றும் விஜய் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் துபாயில் இருப்பதால் ஆடியோவில் இரங்கல் மட்டும் தெரிவித்து இருந்தார்.

நடிகர் சூர்யாவும் வெளிநாட்டில் உள்ள நிலையில், வீடியோவில் இரங்கல் தெரிவித்து இருந்தார். சிம்பு, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் நியூ இயரை கொண்டாட வெளிநாடுகளில் உள்ள நிலையில், சோஷியல் மீடியாவில் மட்டுமே இரங்கல் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அந்தப் படத்தில் ஜோதிகா அழாத நாளே இல்லை! சூர்யா என்ன பண்ணுவார் தெரியுமா? இயக்குனர் சொன்ன தகவல்

ஆனால், அப்படி கூட விஜய் எந்தவொரு இரங்கலும் தெரிவிக்காமல் வடிவேலு போலவே கல் நெஞ்சோடு இருக்காரே என கடும் விமர்சனங்களும் கிளம்பின. ஆனால், அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்தாலும் அண்ணன் செந்தூரப்பாண்டி இறந்த செய்தியை கேட்டு தவித்துப் போய் அங்கிருந்து சென்னை கிளம்பி நேரடியாக விஜயகாந்த் உடலை பார்த்து கதறி அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன் தளபதி கண் கலங்கி பார்த்தது இல்லையே என அவரது ரசிகர்கள் அந்த காட்சிகளை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். அதிலும், கடைசியா ஒரு முறை விஜயகாந்த் முகத்தை பார்த்துக் கொள்கிறேன் என விஜய் திரும்பி பார்த்த அந்த 10 செகண்ட் ரசிகர்களை உலுக்கி விட்டது. அவ்வளவு கூட்ட நெரிசலிலும் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என நடிகர் விஜய் வந்த காட்சி அவர் மீது ரசிகர்களுக்கு மத்தியில் மேலும், மரியாதையை உருவாக்கி உள்ளது.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரமாட்டார் வடிவேலு!. அவ்வளவு மோசமானவரா வைகைப்புயல்!..

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.