ரஹ்மான் தான் வேணும்...ஒற்றைக்காலில் நின்ற விஜய்.. கடன் வாங்கி புக் செய்த தயாரிப்பாளர்...

by Akhilan |
ரஹ்மான் தான் வேணும்...ஒற்றைக்காலில் நின்ற விஜய்.. கடன் வாங்கி புக் செய்த தயாரிப்பாளர்...
X

நடிகர் விஜய் தனது தயாரிப்பாளரிடன் எனக்கு இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் தான் வேணும் என பிடிவாதம் பிடித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவரின் மகன் என்ற அடைமொழியில் சினிமாவிற்கு வந்தவர் நடிகர் விஜய். தந்தையின் இயக்கத்தில் தொடர்ந்து பல படங்கள் நடித்தார். அனைத்தும் அத்தனை நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை.

ரஹ்மான்

1996ம் ஆண்டு பூவே உனக்காக படத்தின் வெற்றி தான் விஜயை நடிகராக பலரிடம் கொண்டு சென்றது. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. அதில் அவர் நடித்த படம் தான் காதலுக்கு மரியாதை. அப்படம் மலையாளத்தில் வெளியான அனியாத்திபிரவு படத்தின் ரீமேக். இரண்டு படத்தினையும் இயக்குனர் பாசில் தான் இயக்கினார்.

மலையாள படத்தின் தயாரிப்பாளார் சொர்கசித்ரா அப்புச்சன். ஒருமுறை காதலுக்கு மரியாதை ஷூட்டிங்கில் விஜயை சந்தித்து இருக்கிறார். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது, அப்புச்சன் விஜயிடம் எனக்கு ஒரு படம் பண்ணிக்கொடுங்கள் எனக் கேட்டு இருக்கிறார். விஜயும் ஓகே சொல்லிவிட்டாராம். அப்படி அவர் தயாரித்த படம் ப்ரண்ட்ஸ் மற்றும் அழகிய தமிழ் மகன்.

அழகிய தமிழ் மகன் படத்திற்கு முதலில் மலையாளத்தில் வெளியான ரன் அவே என்ற படத்தினை தான் ரீமேக் செய்ய இருந்திருக்கிறார்கள். விஜயிற்கு அந்த படம் பிடிக்கவில்லையாம். உடனே வேண்டாம் எனச் சொல்லிவிட்டாராம். சேரன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா என இரு இயக்குனர்களை வைத்து கதை சொல்ல வைத்திருக்கிறார். அதுவும் விஜயிற்கு பிடிக்கவில்லையாம்.

ரஹ்மான்

தொடர்ந்து, விஜய் சொன்ன இயக்குனர் தான் பரதன். தயாரிப்பாளரும் விஜய் முன்னணி நடிகர் என்பதால் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். தொடர்ந்து, அப்புச்சனிடம் எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஆட வேண்டும் எனக் கூறினாராம். தயாரிப்பாளருக்கு ஏற்கனவே ரஹ்மானின் தந்தையை தெரியும் என்பதால் அவரே நேரடியாக படத்தினை குறித்து கூறி இருக்கிறார்.

ரஹ்மானும் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால், தான் தமிழில் தற்போது 1 கோடி ரூபாய் வாங்குகிறேன். அதுப்போல, முதற்கட்டமாக 25 லட்ச ரூபாயை உடனே கொடுக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார். இருந்தும் அப்புச்சன் எனக்கு உங்களிடம் முன்னவே அறிமுகம் இருக்கிறதே. நான் எவ்வளவு தர வேண்டும் எனக் கேட்டார். சிறிது யோசித்த ரஹ்மான் சரி 75 லட்ச ரூபாய் கொடுங்கள் என்றாராம்.

இதையும் படிங்க: ரஹ்மான் மேல் உள்ள வெறுப்பில் பிரபல இயக்குனரை வைத்து செய்த இளையராஜா..

அப்புச்சனும் உடனே கடனை வாங்கி அடுத்த நாளே அவர் கேட்ட அட்வான்ஸ் தொகையை கொடுத்து ரஹ்மானை ஓகே செய்து இருக்கிறார். இதை தொடர்ந்து, திரைப்படம் முடிந்ததும் அவர் அதை 6 கோடி ரூபாய் லாபத்தில் வியோகிஸ்தரிடம் விற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Next Story