ரசிகர்களை காப்பாற்ற விஜய் எடுத்துள்ள கடினமான முடிவு இதுதான்.! நல்ல யோசிச்சிக்கோங்க.!
விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
பூஜா ஹெக்டே, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜய் இதில் ராணுவ வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வழக்கமாக விஜய்யின் திரைப்படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறும். அப்போது ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். விஜயின் முந்தைய சில ஆடியோ விழாக்களின் போது ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் தடியடி நடத்திய சம்பவங்களும் உண்டு.
மேலும், தற்போது தான் கொரானாவின் மூன்றாவது அலை முடிந்து கொஞ்சம் ஓய்ந்து இருக்கிறது. இந்த சமயம் இசை வெளியீட்டு விழாவை வைத்தால் நிச்சயம் கூட்டம் கட்டுக்கடங்காமல் வரும். அதனால் கொரோனா அதிகரிக்க காரணமாகி விடலாம் அல்லது கடந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நிகழலாம்.
இதையும் படியுங்களேன் - 40 ஆயிரம் போட்டு 40 லட்சம் எடுத்த கதை தெரியுமா.?! இதெல்லாம் சினிமா உலகில் மட்டுமே சாத்தியம்.!
இந்த காரணத்தினால் தற்போது பீஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்ற முடிவுக்கு படக்குழு வந்துள்ளதாம். இந்த முடிவை விஜய் எடுத்ததாக கூறப்படுகிறது. ரசிகர்களின் நலனுக்காக இந்த முறை வேண்டாம் என்று அவர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதன் காரணமாகத்தான் தற்போது வரை இசை வெளியீட்டு விழா பற்றிய எந்தவித அறிவிப்பும், அறிகுறியும் வெளியாகவில்லை. அடுத்த வாரம் பீஸ்ட் திரைப்படத்தின் 2வது பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. அதற்கடுத்ததாக ட்ரெய்லர் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.