என்ன விஜய் சார் குட்டி கதை ரெடி பண்ணிடீங்களா.?! இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.!

by Manikandan |
என்ன விஜய் சார் குட்டி கதை ரெடி பண்ணிடீங்களா.?! இணையத்தில் தீயாய் பரவும் தகவல்.!
X

தற்போதெல்லாம் விஜய் படங்களுக்கு செய்தியாளர்கள் காத்திருக்கிறார்களோ இல்லையோ விஜய் பட இசை வெளியீட்டு விழாவிற்குதான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் அந்த விழாவை விஜய் பேசுவார். ஏதேனும் அவருக்கு தோணும் , அவர் கடந்துவந்த சில அனுபவங்களை பகிர்வார். முக்கியமாக குட்டி கதை ஒன்று கூறுவார்.

விஜய் நடிப்ப்பில் உருவான தெறி, மெர்சல், பிகில், சர்கார், மாஸ்டர் வரை அவர் பேசிய கருத்துக்கள் இன்றளவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்களேன் - அட்ஜெஸ்ட்மென்ட் இல்லைனா சினிமாவில் பொழப்பு ஓட்ட முடியாது.! இப்படியா வெளிப்படையா பேசுவீங்க ராதாரவி.?!

ஏற்கனவே இப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்பட முழு பாடல்களும் மார்ச் 20 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அது எங்கு எப்போது நடைபெறும் என இன்னும் தெரியவில்லை.

இடம், தேதி அனைத்தும் சரியாக அமைந்துவிட்டால் உடனே அறிவித்துவிடலாம் என்கிற முடிவில் தயாரிப்பு நிறுவனம் காத்திருக்கிறதாம். கண்டிப்பாக நடைபெறும். அப்படி நடைபெறும் போது தளபதி விஜய் என்ன குட்டிகதை சொல்லப்போகிறார். அல்லது ஏதேனும் அரசியல் சமூக கருத்து சொல்ல போகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story