விஜய் படத்துக்கு அவளோ காசு தர முடியாது.! காலை வாரிய தியேட்டர்கள்.!
தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆக்சன் படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இப்படடம் ரிலீஸ் ஆகும் அடுத்த நாள் கே.ஜி.எப்2 திரைப்படம் வெளியாக உள்ளது. இரண்டு படத்திற்கும் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. ஒரே நாள் இடைவெளியில் தான் இரு படங்களும் ரிலீஸ் ஆவதால் தியேட்டர் கிடைப்பதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது.
கே.ஜி.எப் திரைப்படம் பல மாதங்களுக்கு முன்னரே ஏப்ரல் 14 தேதியை குறிவைத்து அறிவித்துவிட்டனர். அதன் தியேட்டர்கள் ஏற்கனவே புக் செய்து முடிந்துவிட்டது. அதன் பிறகு தான் பீஸ்ட் படத்தின் வியாபாரம் ஆரம்பித்தது.
முதலில் கேரளாவில் ஒரு விநியோகிஸ்தர் பீஸ்ட் படத்தை 5 கோடி அளவுக்கு பேரம் பேசியுள்ளார். ஆனால், சன் பிக்ச்சர்ஸ் அவரை விடுத்து 8 கோடிக்கு வேறு ஒரு நிறுவனத்தினிடம் கேரளா தியேட்டர் உரிமத்தை பேசியது. ஆனால், அந்த நிறுவனம் கடைசியில் காலை வாரிவிட்டதாம்.
இதையும் படியுங்களேன் - தயவு செஞ்சு எதாவது பண்ணுங்க அஜித்-விஜய்.! அடுத்த தலைமுறை சமூக விரோதிகளாக மாறிவிடும்.!
இதனால் வேறு ஒரு விநியோகிஸ்தரிடம் அதே 8 கோடிக்கு சன் பிக்ச்சர்ஸ் வியாபாரம் பேசியதாம் . ஆனால், கே.ஜி.எப் 2 திரைப்படத்திற்கு ஏற்கனவே பெரும்பாலான தியேட்டர்கள் புக் செய்து முடித்தாயிற்று அதனால், 5.5 கோடி என்றால் ஓகே என்று கூற சன் பிக்ச்சர்ஸ் டீமும் இதற்கு மேல் காத்திருக்க முடியாது என வியாபாரத்தை முடித்ததாக கூறப்படுகிறது. கே.ஜி.எப் 2 திரைப்படம் அந்த தேதியில் வரவில்லை என்றால் பீஸ்ட் திரைப்படம் கேரளாவில் மட்டுமே 10 கோடிக்கு விலை போயிருக்கும் என்கிறது சினிமா வட்டாராம்.