தளபதியின் பீஸ்ட் படத்திலிருந்து முக்கிய விஷயம் இப்படி லீக் ஆயிடுச்சே.!?

by Manikandan |   ( Updated:2022-03-20 17:46:52  )
தளபதியின் பீஸ்ட் படத்திலிருந்து முக்கிய விஷயம் இப்படி லீக் ஆயிடுச்சே.!?
X

தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் ரிலீசாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார் எனஅனைத்தும் அறிந்ததே.

இப்படத்தில் இருந்து அவ்வப்போது சில புகைப்படங்கள் அல்லது ஒரு சில வினாடிகள் ஓடும் வீடியோ கூட சில நேரம் லீக்காகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அதனை படக்குழுவும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

beast

தற்போது இன்னொரு விஷயம் பீஸ்ட் படத்திலிருந்து லீக்காகி உள்ளது. நேற்று இப்படத்தின் சென்சார் சர்டிபிகேட் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இப்படத்திற்கு குழந்தைகள் பெரியவர்கள் துணையுடன் சென்று பார்க்கும் வண்ணம் U/A சான்று கொடுத்துள்ளனர். இப்படம் இரண்டு மணி நேரம் 39 நிமிடம் (159 நிமிடம் ) ஓடும் என்ற படத்தின் நீளமும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்களேன் - நல்ல வேளை இப்போவே முடிஞ்சது.! நிம்மதி பெருமூச்சு விடும் சூர்யா.!

படத்தின் நீளத்தை பார்த்ததும் இப்படம் ஒரு விறுவிறுப்பான திரைக்கதையுடன், டாக்டர் படம் போல இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது. இப்படத்தில் இருந்து அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பலத்த வரவேற்பு பெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story