நடிகர் விஜய் எல்லோரிடமும் கலகலப்பாக பேசும் நபர் கிடையாது. படப்பிடிப்புக்கு வந்தால் நேராக கேரவானுக்கு போவார். இயக்குனர் அழைக்கும்போது கீழே இறங்கி வந்து நடித்து கொடுப்பார். ஷாட் முடிந்ததும் மறுபடியும் கேரவானுக்கு போய்விடுவார். மதியம் கேரவானில் தனியாகத்தான் சாப்பிடுவார். ஆறு மணி ஆனதும் வீட்டிற்கு கிளம்பி சென்றுவிடுவார். இதுதான் விஜயின் பழக்கம். ‘விஜய் பேசவே மாட்டார். அவருடன் நடித்தால் செம கடுப்பாக இருக்கும். எப்போது படப்பிடிப்பு முடியும் என இருக்கும்’ என சில நடிகைகளே பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள்.

எப்போதும் மூட் அவுட் ஆனவர் போல, அதிகம் பேசாமல் இருப்பது விஜயின் சுபாவம். சினிமா மேடைகளில் கூட அதிகம் பேசமாட்டார். சமீபகாலமாகத்தான் கொஞ்சம் பேசவே துவங்கியுள்ளார். கூச்ச சுபாவம் உள்ளவர். எதையும் தயங்கி தயங்கி பேசும் குணமுடையவர் அவர். சினிமாவில் துள்ளலாக நடிக்கும் விஜயை ஒருபோதும் நிஜத்தில் பார்க்கவே முடியாது.
இதையும் படிங்க: அடுத்த சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்தே ஓயல.. அதுக்குள்ள அடுத்த விஜயா!.. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!…
சினிமாவில் அவர் எப்படி இருக்கிறாரோ அதற்கு நேர் எதிராகன சுபாவம் அவருடையது. இது அவருடன் பழகிய மற்றும் அவரை வைத்து படம் எடுத்த எல்லா இயக்குனர்களுக்கும் தெரியும். துவக்கத்தில் இது பலருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் ஒரு கட்டத்தில் விஜயின் சுபாவம் அதுதான் என எல்லோரும் புரிந்து கொண்டனர்.

இந்நிலையில், விஜய் செய்த செயல் லியோ படக்குழுவை அப்செட் ஆக்கியுள்ளது. பொதுவாக ஒரு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ் போன்ற நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்கும்போது, அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் கடைசிநாளில் படப்பிடிப்பு குழுவினர் விஜயுடன் குரூப் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். நான் இந்த படத்தில் பணிபுரிந்தேன் என அவர்கள் மற்றவர்களிடம் காட்டவும் அந்த புகைப்படம் உதவியாக இருக்கும். எனவே, அதைபுரிந்துகொண்டு நடிகர்களும் மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு நடுவில் நின்று சந்தோஷமாக போஸ் கொடுப்பார்கள்.

ஆனால், விஜய்க்கு கூட்டம் என்றாலே அலர்ஜிதான். லியோ படத்தின் கடைசி நாளில் இப்படி புகைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளோம் என அவரிம் கூறியுள்ளனர். ஆனால், என்ன நினைத்தாரோ, கிளம்பி வீட்டுக்கு போய்விட்டாராம். அவருக்காக காத்திருந்த படக்குழுவினர் அப்செட் ஆகிவிட்டார்களாம். அவர் என்ன மூடில் இருந்தார்?.. என்ன பிரச்சனை என தெரியவில்லை?.
இப்படி செய்யலாமா விஜய்?!..
இதையும் படிங்க: சூட்டிங் வரமாட்டேன்! ஆனால் சம்பளம் மட்டும் 12 கோடி வேணும் – இதென்ன நியாயம்? அட்டூழியம் பண்ணும் நயன்
