80களில் பல ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் மூலம் விஜயகாந்தை ஹீரோவாக மக்கள் மனதில் இடம் பெற செய்வதவர் இவர்தான். அப்பா இயக்குனர் என்பதால் சிறு வயது முதலே விஜய்க்கும் நடிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.
சிறு வயதில் விஜய்க்கு பிடித்தமான பொழுதுபோக்கு திரைப்படங்கள் பார்ப்பது மட்டுமே. ரஜினி படமெல்லாம் பார்த்தபோதுதான் அவருக்கு நாமும் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. ஆனால், விஜய்க்கு சினிமா வேண்டாம் என்பதில் எஸ்.ஏ.சந்திரசேகர் உறுதியாக இருந்தார்.
இதையும் படிங்க: அசினுடன் ஷூட்டிங்!.. கேரவானுக்கு பின்னாடி விஜய் செஞ்ச காரியம்!.. அதிர்ந்து போன படக்குழு!..
எஸ்.ஏ.சந்திரசேகர் பல அறிவுரைகளை சொல்லியும் விஜய் கேட்கவில்லை. விஜயின் மன உறுதியை பார்த்த எஸ்.ஏ.சி சொந்த காசை போட்டு ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் விஜயை அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் ரசிகன், விஷ்ணு, தேவா, செந்தூரபாண்டி என சில படங்களை இயக்கினார்.
அதன்பின், விஜய் மற்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தன்னை மெருகேற்றிக்கொண்டு பல படங்களிலும் நடித்தார். கில்லி போன்ற படங்களின் வெற்றி விஜயை முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாற்றியது. ஒருகட்டத்தில் ஆக்ஷன் ரூட்டை பிடித்து ரசிகர்களுக்கு பிடித்த தளபதியாக மாறினார்.
இதையும் படிங்க: டிரிங்க் அண்ட் டிரைவ் கேஸில் சிக்கிய விஜய்!.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?…
விஜயின் படங்கள் வசூலை வாரிக்குவித்ததால் அவரின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. 20 வருடங்களுக்கு முன்பு லட்சங்களில் சம்பளம் வாங்கிய விஜய் இப்போது ரூ.200 கோடி வாங்குகிறார். ஆனால், இதே விஜய் வெறும் ரூ.5000-ஐ மட்டுமே சம்பளமாக பெற்று ஒருபடத்தில் நடித்தார் என்றால் நம்பமுடிகிறதா?
நாளைய தீர்ப்பு படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அதற்கு முன்பு அதாவது விஜய் சிறுவனாக இருக்கும்போதே சில படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் முதலில் நடித்த திரைப்படம் ‘வெற்றி’. 1984ம் வருடம் வெளிவந்த இந்த படத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறுவயது விஜயகாந்தாக நடித்த விஜய்க்கு ரூ.500 சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இந்த படத்தை இயக்கியதும் அவரின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அப்பாவிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு போன விஜய்!.. கடைசியில் எங்கே இருந்தார் தெரியுமா?…
1965ம் வருடம்…
நடிகர் சிவக்குமாரின்…
அமரன், மதராஸி…
இந்த பொங்கலுக்கு…
இந்த பொங்கல்…