இனி சிங்கப்பாதை தான்… சூப்பர்ஸ்டார் டைட்டிலே வேணாம்.. இதை செய்தால் விஜய் தான் இனி எதிர்காலம்!

Published on: August 24, 2023
vijay
---Advertisement---

தமிழ் சினிமா நடிகர்கள் ஒரு கட்டத்துக்கு  மேல் தங்களுடைய சினிமா பயணத்தில் பெரிய ட்விஸ்ட்டை வைப்பார்கள். அதில் சிலர் தயாரிப்பாளாராகவோ, இயக்குனராகவோ செல்வார்கள். செல்வாக்கான ஒரு சிலர் தான் தங்கள் பயணத்தினை அரசியல் பக்கம் திருப்புவார்கள்.

இது பலகாலமாக நடந்து வருகிறது. இதில் சிலர் ஹிட் அடிப்பார்கள். பலர் தோல்வி முகத்தினை தான் தழுவுவார்கள். எம்.ஜி.ஆர் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்து தமிழக முதல்வராக பலமுறை ஆட்சிக்கட்டில் ஏறியவர். ஆனால் அவருடன் சினிமாவில் மல்யுத்தம் செய்த சிவாஜி கணேசனால் ஒருமுறை கூட தேர்தலில் வெல்ல முடியவில்லை. விஜயகாந்த் தேர்தலில் செய்த சாதனையை கூட உலகநாயகன் கமலால் செய்ய முடியவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து பின்னர் அந்த முடிவில் இருந்து பின்வாங்கினார்.

இதையும் படிங்க: என்னம்மா கண்ணு சவுக்கியமா? சத்யராஜை அசிங்கப்படுத்திய ரஜினி… தீரா பகை உருவானது எப்படி?

விரைவில் விஜயின் அரசியல் அறிவிப்பு வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தன்னுடைய கட்சி முதல் பல விஷயங்களை விஜய் ஆராய்ந்து வருவதாகவும் திருப்தியான பிறகே அதுகுறித்த அறிவிப்புகளை எல்லாம் வெளியிடுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் ஜோதிடர் ஒருவர் விஜய் கண்டிப்பாக முதல்வர் ஆகலாம். அதற்கு இதை செய்தாலே போது எனக் கூறிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க : நான் எவ்வளவோ கெஞ்சியும் ஒத்துக்கவே இல்லை!. அதனாலதான் அப்படி ஆச்சி!.. புலம்பும் ஜி.வி.பிரகாஷ்..

அந்த வீடியோவில், விஜய் எடுத்து வைத்து இருக்கும் மூவ் எல்லாமே அற்புதமானது. இது பல வருடமாக அரசியலில் இருப்பவர்களையே அச்சமாக்கி இருக்கிறது. இதனால் தான் எதோ ஒரு அரசியல் பெண்மணி விஜய் சிகரெட் பிடித்ததை சர்ச்சை ஆக்குகிறார். ஏன் அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம். அதை விட பெரிய இடத்துக்கு விஜயால் வர முடியும்.

அவர் சரியாக சென்று கொண்டு இருக்கிறார். விஜய் தற்போது செய்ய வேண்டியது மக்கள் மனதினை வெல்ல வேண்டும் என்பது தான். விஜயின் மதம் குறித்து மட்டுமே அவருக்கு எதிராக பேச முடியும். அந்த ஒரு இடத்தினை சரியாக்கினால் போதும். மதம் எல்லாம் மாற தேவை இல்லை. அவர் எல்லாருக்குமான முதல்வராக இருப்பார் என்பதை மக்களை நம்ப வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

 

வீடியோவைக்காண: https://www.youtube.com/watch?v=9FS64DXRb-g

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.