தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறி இருப்பது யாருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம். விஜயா? ரஜினிகாந்தா? என்று தான் பல தரப்பிலும் விவாதங்களே போய் கொண்டு இருந்தது. இந்த பிரச்னை தொடங்கி இருந்தாலும் தன்னுடைய ஜெய்லர் வெற்றியால் இதை சற்று மட்டுப்படுத்தி இருக்கிறார் ரஜினிகாந்த்.
விஜய் தொடர்ச்சியாக வசூல் மன்னனாகி இருக்கிறார். இதனால் இனி கோலிவுட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய் தான் என ஒரு பக்கம் கோஷங்கள் எழுந்தன. நான் இருக்கும் வரை அந்த பட்டம் யாருக்கும் கிடையாது எனக்கு மட்டும் தான் என ரஜினி தரப்பும் கறார் காட்டுகிறது.
இதையும் படிங்க: கவின் கல்யாணத்துக்கு போய் சாப்பிடல!.. லாஸ்லியாவின் கேப்ஷனை பார்த்து காண்டான பிக் பாஸ் ரசிகர்கள்!..
நேரடியாக பேசாவிட்டாலும் தன்னுடைய ஜெய்லர் ரிலீஸில் அவர் சொன்ன காக்கா கதையால் விஜய் தான் அது என பலரும் கலாய்க்க தொடங்கினர். அதே நேரத்தில் அண்ணாத்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜெய்லர் மகாமெகா ஹிட் படமாக அமைந்து விட்டது. கிட்டத்தட்ட வசூல் 800 கோடியை நெருங்கி கொண்டு இருக்கிறது.
இதனால் விஜய் தரப்பும் கடும் கோபத்தில் இருக்கிறாரார்களாம். இதனால் லியோ படத்தினை கண்டிப்பாக வெற்றி படமாக தான் தர வேண்டும் என்பதில் விஜய், லோகேஷிடம் கறாராக சொல்லி விட்டாராம். படக்குழுவும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வனிதா பொண்ணுக்கு 18 வயசு ஆகிடுச்சாம்!.. விஜய் பையனுக்கு அடுத்த ஹீரோயின் பார்சல்!..
இந்நிலையில் லியோ படம் கிட்டதட்ட பாட்ஷா படத்தின் சாயலாகவே இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கிறது. ஒரு கேங்ஸ்டார் திடீரென தன்னுடைய மொத்த சாம்ராஜ்ஜியத்தினை விட்டுவிட்டு குடும்பத்துடன் சாதாரண வாழ்க்கை வாழ்கிறார்.
அவரை வில்லன்கள் எப்படி மீண்டும் பழைய கேங்ஸ்டாராக்கி சண்டையிடுகிறார்கள் என்ற மாடலில் தான் லியோ படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல் ரைட்ஸ் வாங்கப்பட்ட ஹிஸ்ட்ரி ஆப் வயலன்ஸ் படத்தின் கதையும் பாட்ஷா சாயலில் தான் இருக்கும் என்பதால் லியோ படம் பாட்ஷா மாதிரியே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சரி அடுத்த சண்டைக்கு ரெடியாகுங்க!
Rj balaji…
விமர்சனம் செய்வது…
விஜய் அக்டோபர்…
கார்த்திக் சுப்புராஜ்…
Surya: நடிகர்…