Thalapathy: ரஜினிகாந்த் போலவே தன்னுடைய சினிமா கேரியரை கமர்ஷியலாகவே வைத்து கொண்டவர் நடிகர் விஜய். பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் இரண்டு சண்டை, மூணு பாட்டு, கொஞ்சம் செண்டிமெண்ட் என முடித்து கொள்வார்.
அவர் இரண்டு கதாபாத்திரங்கள் நடித்ததே ரொம்ப வருஷம் கழித்து அழகிய தமிழ் மகன் படத்தில் தான். இதற்கு காரணமாக எதுவும் ரிஸ்க் எடுக்காமல் ஆடியன்ஸ் 3 மணி நேரம் பார்க்கும் படம் பிடிக்குமாறு இருந்தாலே போதும் என தன்னுடைய சினிமா நண்பர்களிடம் விஜய் கூறுவாராம்.
இதையும் வாசிங்க:டம்மி துப்பாக்கி.. அட்டக்கத்தி.. வெறும் பில்டப்பு!.. லோகேஷை பங்கம் பண்ணிய மன்சூர் அலிகான்…
இதையே பல வருடமாக ஃபாலோ செய்து வருகிறார். கிட்டத்தட்ட லியோவில் கூட அதிக அளவில் ஆக்ஷன் காட்சிகள் இருந்தால் கூட பெரிய மெனக்கெடல் இல்லாத நடிப்பு தான். கதை கூட ரொம்ப சஸ்பென்ஸாக இருக்காது. அதற்கேற்ப தன்னிடம் சொல்லும் கதைகளை தான் விஜய் ஓகே செய்வார்.
அப்படி ஒரு தேசிய விருது இயக்குனர் சொன்ன கதையே விஜய்க்கு திருப்தி இல்லாமல் நோ சொல்லிவிட்டாராம். அது ஜிகர்தண்டாவை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான். பாபி சிம்ஹா என்ற சாதாரண ஆக்டரை மாஸாக காட்டி அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வாங்க வழி செய்தவர்.
இதையும் வாசிங்க:ரேட்டிங்காக வாழ்க்கையோட விளையாடுறதா? பிக்பாஸில் பத்திக்கிட்டு எரியும் சம்பவம் – நினைச்சத சாதிச்சிட்டாங்கே
இதுகுறித்து கார்த்திக் சுப்புராஜ் அளித்திருக்கும் பேட்டியில் இருந்து, விஜய் சாருக்கு கதை சொன்னேன். எனக்கு அவருக்காக சரியாக கதை சொல்ல வரவில்லை. ஒருமுறை அல்ல இரண்டு முறை நான் சொல்லிய கதைகளும் அவருக்கு பிடிக்கவே இல்லை.
மேலும், விரைவில் அவருக்கு பிடித்த கதைகளை அவரிடம் சொல்லுவேன். என்னுடைய பட கதை தயாரித்த பின்னர் நலன் குமாரசாமி படிப்பார். படம் உருவான பின்னரும் அவர் பார்த்து கரெக்ஷன் சொல்லுவார். தற்போது ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தினை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…