Ranabaaliக்கு ஹைப் பத்தல… தரமான ட்ரெய்லர் ரிலீஸுக்கு ப்ளான் போட்ட விஜய் தேவரகொண்டா!
‘ரணபலி’ படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு பெரிய ஃபேன் ஃபாலோயிங் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் இருக்கிறது.
‘கிங்டம்’ படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘ரணபலி’ மற்றும் ‘ரௌடி ஜனார்தனா’ என ரெண்டே படங்கள் தான் லைன் அப்பில் உள்ளது.
இதில் ‘ரணபலி’ படத்தை இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக ‘தி மம்மி’ புகழ் அர்னால்ட் வோஸ்லூவும் நடித்துள்ளனர்.
தற்போது, இந்த படத்தின் ட்ரெய்லரை வருகிற அக்டோபர் 8-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. படம் அக்டோபர் 16-ஆம் தேதி தான் திரைக்கு வருகிறதாம்.




