latest news

விஜய் தேவரகொண்டா என்னை அழ வச்சார்!.. ராஷ்மிகா மந்தனா பேட்டி!…

ராஷ்மிகா மந்தனா பேட்டி

கீதா கோவிந்தம் திரைப்படத்தில் முதல்முறையாக விஜய தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடித்தனர்.
இருவரின் ஜோடி பொருத்தமும், படத்தின் கதை, திரைக்கதையும், காட்சிகளும் ரசிகர்களுக்கு பிடித்து போனதால் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படம் மூலம் தமிழிலும் ராஷ்மிகாவுக்கு நிறைய ரசிகர்களை உருவாக்கியது. அதன்பின் டியர் காம்ரேட் என்கிற படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். பல வருடங்கள் நண்பர்களாக இருந்த இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க துவங்கினர். சில மாதங்களுக்கு முன்பு திருமணமும் செய்து கொண்டனர்..

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா ‘கீதா கோவிந்தம் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பின் போது நான் ஒரு பாடலை சத்தமாக கேட்டதற்கு விஜய் என்னிடம் கோபப்பட்டு கத்தி விட்டார்.. இந்த துறை எனக்கு புதிது என்பதால் அந்த நிகழ்வு என்ன மோசமாக பாதித்து நான் அழுதுவிட்டேன்.. ஆனால் நாட்கள் கடந்த பின் அவரைப் பற்றி புரிந்து கொண்டு நாங்கள் நண்பர்களாகி விட்டோம்’ எனக் கூறியிருக்கிறார்.

Author
சிவா ✓

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]