latest news

சூர்யாவின் சீன்!.. ஓடிடி உரிமை இவ்ளோ கோடியா?!.. சும்மா கலக்குறாரே!…

சூர்யா சீன் திரைப்பட அப்டேட்

சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாகவே வெற்றிப்படங்கள் அமையவில்லை. அதிலும் அவர் பெரிதும் எதிர்பார்த்த கங்குவா திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்தது. அதன் பின் வெளியா ரெட்ரோ சுமாரான வெற்றியை பெற்றது..

ஆனால், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பண்ணசாமியாக சூர்யா நடித்து வெளியான கருப்பு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்திற்கு பிறகு மலையாள பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சீன் என்கிற திரைப்படத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில்தான் சீன் திரைப்படத்தின் ஓடிடி வெளியிட்டு உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.88 கோடிக்கு வாங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ள சீன் திரைப்படத்தை சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் சூர்யா தனது ழகரம் புரடெக்‌ஷன் சார்பில் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Author
சிவா ✓

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]