எங்களுக்குள்ள போட்டியிருக்கு!.. ஆனா நானும் விஜயும் எதிரி கிடையாது!.. அஜித் ஓப்பன்…
விஜய் பற்றி அஜித் கொடுத்த பேட்டி

30 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் போட்டி நடிகர்களாக வலம் வந்தவர்கள் அஜித், விஜய். துவக்கத்தில் இருவரும் காதல் படங்களில் நடித்துவந்தானர். அதன்பின் ஆக்சன் ஹீரோக்களாக மாறி பல படங்களிலும் நடித்தனர். ஒரு கட்டத்தில் இருவருமே மாஸ் ஹீரோக்களாக மாறினார்கள்.
அதேநேரம் அஜித்தை ஒப்பிட்டால் விஜய் அதிக வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். விஜய்க்கு தோல்வி படங்கள் என்பது மிகவும் குறைவுதான். எனவே எப்படியாவது விஜயை தாண்டி விட வேண்டும் அல்லது விஜய் இடத்தை பிடிக்க வேண்டும் என அஜித் நிறைய முயற்சிகள் செய்தார். ஆனால் பல காரணங்களால் அது முடியாமல் போனது..
எனவே விஜய்க்கு அடுத்த இடத்தில் அஜித் இருந்தார். விஜய் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை வைத்துதான் அஜித்தும் தனது சம்பளத்தை முடிவு செய்து வந்தார். ஆனால் தற்போது விஜய் அரசியலுக்கு சென்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகிவிட்டார். அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனாலும் விஜயும் அஜித்தும் நல்ல நண்பர்களாக வலம் வருகிறார்கள். சில நாட்களுக்கு முன்பு விஜய் லண்டன் சென்றிருந்தபோது அஜித் கலந்து கொண்ட கார் ரேஸ் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதோடு இருவரும் கட்டிப் பிடித்து அன்பை வெளிப்படுத்திய வீடியோக்களும் வெளியானது..
இநிந்லையில்தான், அஜித் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டி தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ‘ எந்த துறையாக இருந்தாலும் இரண்டு பேருக்குள் போட்டி இருக்கும்.. பொறாமை இருக்கும்.. அப்படித்தான் எனக்கும் விஜய்க்கும் இருக்கிறது.. நாங்கள் எதிரிகள் கிடையாது.. தனித்தனியாக நடிக்கும் போது ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை கிடைக்கிறது’ என்று கூறியிருக்கிறார்.




