Seyon: பொங்கல் ரிலீஸிருந்து விலகும் சேயோன்!.. சிவகார்த்திகேயன் சொன்ன காரணம்…
சேயோன் ரிலீஸ் பற்றி சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்

சிவகார்த்திகேயனுக்கு அமரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து வெளியான மதராசி, பராசக்தி போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை. எனவே எப்படியாவது ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என முடிவு செய்து தாய் கிழவி படம் மூலம் கவனம் ஈர்த்த சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் என்கிற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் மதுரை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. சேயோன் திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது இந்த படம் பொங்கலுக்கு வெளியாகாது என்பது தெரியவந்திருக்கிறது.
சேயோன் திரைப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகாது எனவும் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். 60 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும், 40 சதவீத படப்பிடிப்பு மீதமுள்ளதாகவும் முழுமையான மாஸ் கமர்சியல் படமாக சேயோன் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.




