latest news

Jailer 2: தலைவரு நிரந்தரம்!.. 500 கோடியை தாண்டிய ஜெயிலர் 2 வியாபாரம்!..

ஜெயிலர் 2 பட வியாபாரம்

ரஜினியின் சினிமா கெரியரில் அதிக வசூலை குவித்த திரைப்படம் என்றால் அதன் ஜெயிலர் திரைப்படம்தான். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்த திரைப்படம் ரூ.630 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதையடுத்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருக்கிறது.

இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், விஜய் சேதுபதி, ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பலரும் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். ஜெயலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஜெயிலர் 2 திரைப்படம் வெளியீட்டுக்கு முன்பு ரூ.500 கோடி வியாபாரத்தை தாண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் வெளிநாட்டு திரையரங்க உரிமை சுமார் ரூ.90 கோடிக்கும், ஓட்டி உரிமை ரூ.105 கோடி வரை விற்பனையாகியிருக்கிறதாம். அதோடு ஆடியோ உரிமை, தமிழ்நாட்டு திரையரங்க வெளியீட்டு உரிமை, தொலைக்காட்சி உரிமை என எல்லாவற்றையும் சேர்த்தால் இந்த படத்தின் வியாபாரம் 500 கோடியை தாண்டி விட்டதாக சொல்கிறார்கள். ஜெயிலர் 2 திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

Author
சிவா ✓

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மின் அஞ்சல் முகவரி [email protected]