விஜய் நழுவ விட்ட முக்கிய படங்கள்!.. அந்த கதையில் நடிச்சதால வாழ்க்கையே மாறிய பிரபலங்கள்…

Published on: April 13, 2024
vijay
---Advertisement---

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் விஜய். நடிப்புதான் எனது கேரியர் என அப்பாவிடம் அடம்பிடித்து சினிமாவுக்கு வந்தவர். துவக்கத்தில் அப்பாவின் இயக்கத்தில் இவர் நடித்த சில படங்கள் பெரிய அளவுக்கு ஓடவில்லை. அதன்பின் விக்ரமனின் இயக்கத்தில் உருவான ‘பூவே உனக்காக’ படம் இவருக்கு திருப்பு முனையை கொடுத்தது.

அதன்பின் காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், கில்லி ஆகிய படங்களின் மெகா வெற்றி விஜயை முன்னணி நடிகராக மாற்றியது. கில்லி திரைப்படம் ரஜினி படம் போல் வசூலை வாரிக்குவித்தது. இப்போது ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறிவிட்டார். ‘கோட்’ படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதையும் படிங்க: அடுத்த பட தயாரிப்பாளரை டிக் அடித்த விஜய்!. அட இந்த டிவிஸ்ட்ட எதிர்பார்க்கவே இல்லையே!…

விஜய் தனது சினிமா கேரியரில் பல முக்கிய படங்களை கதை பிடிக்காமலோ அல்லது கால்ஷீட் இல்லாமலோ தவற விட்டிருக்கிறார். அப்படிப்பட்ட படங்களை பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம். விக்ரமனின் இயக்கத்தில் உருவான ‘உன்னை நினைத்து’. இதில் விஜய் சில நாட்கள் நடித்துவிட்டு பின் விலகினார். அதன்பின் அதில் சூர்யா நடித்தார்.

முதல்வன் பட கதை கூட விஜயை தேடி வந்தது. ஆனால், எஸ்.ஏ.சி நிராகரித்துவிட்டார். லிங்குசாமியின் சண்டக்கோழி பட வாய்ப்பையும் விஜய் இழக்க விஷால் நடித்து அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. ஆட்டோகிராப் கதையை விஜயிடம் சொன்னார் சேரன். ஆனால், அவர் நடிக்கவில்லை.

இதையும் படிங்க: 20 முறை விஜயுடன் மோதிய தனுஷ் படங்கள்… ஜெயித்தது யாரு? வாங்க பார்க்கலாம்..

சுந்தர் சி இயக்கத்தில் உருவான உள்ளத்தை அள்ளித்தா, சூர்யா நடித்த காக்க காக்க, தனுஷ் நடித்த அனேகன், அஜித் நடித்த தீனா, மாதவன் நடித்த ரன், சூர்யா நடித்த சிங்கம், விக்ரம் நடித்த தூள் ஆகிய படங்களின் கதை முதலில் விஜயிடம்தான் வந்தது. ஆனால், சில காரணங்களால் அந்த படங்களில் விஜய் நடிக்கவில்லை. பொன்னியின் செல்வன் பட வாய்ப்பும் விஜய்க்கு வந்தது. ஆனால், நடிக்கவில்லை.

இந்த எல்லா படங்களுமே சூப்பர் ஹிட் ஆனது. அதோடு, இந்த படங்களில் நடித்த நடிகர்களின் திரை வாழ்க்கையையே இந்த படங்கள் மாற்றியது என்றுதான் சொல்ல வேண்டும்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.