Cinema History
Vijay: இதெல்லாம் எம்ஜிஆர், சிவாஜி காலத்துலயே பண்ணிட்டாங்க… விஜய் செஞ்சது பழைய டெக்னிக் தான்..!
சமீபத்தில் விஜயின் அரசியல் பிரவேசத்தையும், அவரது கொள்கையையும் தாறுமாறு தக்காளிச் சோறு ஆக பொளந்து கட்டி வருகிறார் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான். இவர் விஜய் கட்சி ஆரம்பித்த புதிதில் விஜய் என் தம்பி. அவர் அரசியலுக்கு வர்றதுல என்ன தப்பு.
அவரே என்னை எதிர்த்தாலும் சரி. அவர் தம்பி தான் என்று பேசியிருந்;தார். அதே நேரம் விஜய் மாநாட்டில் தனது கொள்கையை அறிவித்ததும் அது கருவாட்டு சாம்பார் என்றும் விஜய் கூமுட்டை என்றும் தாறுமாறாகத் தாக்கியிருந்தார். தொடர்ந்து விஜய் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று பார்த்த வேளையில் சீமானின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also read: Sivakarthikeyan: அடுத்த விஜய்?!. நான் நேத்து வந்தவன்!. அது ரொம்ப ஸ்பெஷல்!.. ஃபீல் ஆகும் எஸ்.கே…
ஆனால் கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. கமல் இவ்வளவுக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர். உலகநாயகன் என்று தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்தியத்திரை உலகையே ஆச்சரியப்பட வைத்து வருகிறார்.
அவருடைய பிறந்தநாளான நவம்பர் 7 ல் விஜய் வாழ்த்து எதுவும் சொல்லவில்லை. இதற்குப் பின்னணியில் கமல் விஜயின் மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவிக்காததுதான் காரணமா என்றும் பேசப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பிரபல டாக்டர் காந்தாராஜ் விஜய் சீமானுக்கு வாழ்த்து சொன்னது குறித்து தனது கருத்துகளைப் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.
விஜய் இந்த விஷயத்தில் சீமானுக்கு வாழ்த்து சொல்லி இருப்பது பழைய டெக்னிக் தான். சீமான் கொஞ்சம் ஏமாந்துட்டாரு. தீவார் என்ற இந்திப்படத்தில் அமிதாப்பச்சன் ஹீரோ. அவரது சகோதரர் சசிகபூர். அதைத்தான் தமிழில் தீ என்ற பெயரில் எடுத்தாங்க. அமிதாப்பச்சன் படத்தில் பின்னி எடுத்திருப்பார். நடிப்பிலும் சரி. பைட்டிலும் சரி.
கடைசில சாகற சீனிலும் சரி. அந்த வருஷம் பிலிம்பேர் அவார்டு அவருக்குத் தான்னு சொல்லிட்டாங்க. ஏற்கனவே 2 தடவை வாங்கிட்டாரு. ஆனால் சசிகபூருக்கு பிலிம்பேர் விருதுன்னு அறிவிச்சாங்க. கண்டனக்குரல் எல்லாப் பக்கத்தில் இருந்தும் வந்தது. அமிதாப்பச்சன் அப்படி நடிச்சிருக்காரு. எப்படி சசிகபூருக்குக் கொடுக்கலாம்னு சொன்னாங்க.
அதைக் கேள்விப்பட்டதும் லண்டன்ல இருந்து பிளைட் பிடிச்சி வந்து அமிதாப்பச்சன் அந்த அவார்டை தானே வந்து சசிகபூருக்குக் கொடுத்தார். அமிதாப்பச்சன் எவ்வளவு பெரிய ஆளு. தனக்கு வரவேண்டிய அவார்டைக் கூட லண்டன்ல இருந்து பிளைட் பிடிச்சி வந்து சசிகபூருக்குக் கொடுத்துருக்காரேன்னு சொல்லி அவருக்கு அவ்ளோ பேரு. அவார்டு கிடைச்சதைப் போல பத்து மடங்கு விளம்பரம் அவருக்குக் கிடைச்சது. அதைத் தான் இப்போ விஜய் செஞ்சிருக்காரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.