
Cinema News
அப்பாகிட்ட மட்டுமில்ல மகனுடன் கூட விஜய் பேசுவது இல்லையா? இயக்குனர் எண்ட்ரி கூட சொல்லவில்லையாம்!
பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மகனாக இருந்தாலும் முதல் சிலபடங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர் தான் நடிகர் விஜய். இருந்தும் கோலிவுட்டில் இன்று அவர் உருவாக்கி இருக்கும் கோட்டை மிகப்பெரியது. இதற்கு முழுக்க முழுக்க அவரின் உழைப்பே காரணம். இந்த நிலையில் அவரின் மகன் ஜேசன் சஞ்சயின் எண்ட்ரியில் பல ஷாக் சர்ச்சைகளும் வட்டமடித்து வருகிறது.
டோக்கியோ மற்றும் லண்டனில் முறையாக திரைப்பட படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய். ஜேசனின் முதல் படத்தினை லைகா ப்ரோடக்ஷன் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து ஜேசன் சஞ்சயிற்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி இருந்தனர். அப்பா நடிகராக இருந்தாலும், தாத்தா வழியில் அவரின் எண்ட்ரி என எஸ்.ஏ.சந்திரசேகரை மீண்டும் கோலிவுட்டில் கொண்டாட தொடங்கினர்.
இதையும் படிங்க : லியோ ரிலீசுக்கு அழைக்கப்பட்ட முன்னணி நடிகர்கள்… ஆப்பை நாங்களே வச்சிக்குவோம? போங்கப்பபா!
அப்போது சினிமாவில் கொடி கட்டி பறந்த விஜயகாந்தின் உதவியோடு விஜயை அறிமுகம் செய்தார் சந்திரசேகர். ஆனால் அந்த உதவிக்கு பின்னார் அவருக்காக எஸ்.ஏ.சி எடுத்த 17 படங்களும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. எந்தவித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் புரட்சி படங்களை எடுத்து பிரபலமானவர்.
ஏற்கனவே எஸ்.ஏ.சியுடன் விஜய் பேசுவதில்லை என்ற தகவல் அனைவருக்கும் தெரிந்த நிலையில் மகன் ஜேசனுடன் கூட விஜய் பேசுவது இல்லையாம். பல வருடங்களாக லண்டனில் இருந்து சமீபத்தில் சென்னை வந்து இருக்கிறார். அந்த நேரத்தில் விஜய் வெளிநாட்டில் இருந்தாராம். இதனால் லைகா அறிவிப்பு கூட மற்றவர்கள் போலவே விஜயிற்கு தெரிந்ததாம்.
இதையும் படிங்க : ரொம்ப சீன போடாதீங்க… இதுக்காக தான் இந்த பில்டப்பா? நெல்சன், அட்லீயின் பேச்சை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
லைகா சுபாஸ்கரனும், சங்கீதாவின் அப்பாவும் நெருங்கிய நண்பர்களாம். அவர் தனது பேரனுக்காக பேசி இந்த வாய்ப்பை கேட்டு வாங்கி கொடுத்ததாக ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. பட பூஜை சமயத்திலாவது விஜய் வருவாரா இந்த சர்ச்சைக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.