என்ன சொன்னாலும் விஜய்க்கு இது சுத்தமாக பிடிக்காது.! அவரின் அம்மா கூறிய சீக்ரெட் இதோ..,
தளபதி விஜய்க்கு 47 வயது என்று விக்கிப்பீடியாவை பார்த்து நாம் செக் செய்யும் போது தான் தெரிகிறது. ஆனால், அவரை பற்றி தெரியாத நபர்கள் அவரை பார்த்தால், அவருடைய வயது கண்டிப்பாக 27 முதல் 30 வயதுக்குள் தான் இருக்கும் என்று அடித்து கூறுவார்கள். அந்த அளவுக்கு தனது வயதை வருடம் வருடம் குறைத்து கொண்டே வருகிறார் தளபதி விஜய்.
இந்த வயதிலும் இது எப்படி சாத்தியமாகிறது, என்று அவரது உடற்பயிற்சி பற்றிய தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தால், நமக்கு கிடைப்பது அதைவிட ஆச்சரியமூட்டும் தகவல்கள் தான். கிட்டத்தட்ட விஜய் 30 நிமிடங்கள் தான் உடற்பயிற்சி செய்வாராம். அதுவும் சில நாட்கள் தவற விட்டு விட்டால் அதை அன்றைய நாளில் அப்படியே விட்டு விடுவாராம். சிலர் அன்றைய நாள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் ஏதோ பித்து பிடித்தது போல் இருப்பார்கள். ஆனால், விஜய் அந்த ரகம் கிடையாது.
ஆனால், உணவு கட்டுப்பாட்டில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டான மனிதராக நடந்து கொள்வாராம். இதுபற்றி விஜய்யின் அம்மா சோபனா ஒருமுறை பேட்டியில் கூறுகையில், விஜய்க்கு நொறுக்குத்தீனி சுத்தமாக பிடிக்காதாம்.
இதையும் படியுங்களேன் - இளையராஜாவுக்கு இப்படி ஒரு முகம் இருக்கிறதா.!? வெளியான திடுக்கிடும் தகவல்கள்..,
நாங்கள் எவ்வளவு சொன்னாலும் அதிகமாக நொருக்கு தீனி வாங்கி வீட்டில் வைத்தாலும் அதை தொடவே மாட்டாராம். ஏன் என்றால் அவருக்கு நொறுக்குத்தீனி சுத்தமாக பிடிக்காதாம். அதுவே ஒரு வகையில் அவரது உடல் தேசத்திற்கு மிகவும் பலனாக அமைந்துவிட்டது.
இன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை உலகமெங்கும் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதன் முன் பதிவு புக்கிங் மட்டுமே பல கோடிகளை கடந்து மீண்டும் தான் ஒரு பாக்ஸ் ஆபீஸ் கிங் என்பதை நிரூபித்து வருகிறார் தளபதி விஜய்.