எனக்கு அட்லீதான் வேணும்... அடம் பிடிக்கும் விஜய்... இதுதான் காரணமாம்...
நடிகர் விஜய் அட்லியின் இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே விஜய்க்கும் சரி, அவரின் ரசிகர்களுக்கும் சரி ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பவை ஆகும். அதோடு, இந்த 3 படங்கள் மூலமாகவே விஜயின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்து அவரின் சம்பளமும் 100 கோடி வரை நெருங்கி விட்டது. எனவே, அட்லீ மீது விஜய்க்கு தனி பாசம் உண்டு.
அதேநேரம், ஏஜிஎஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் கூறிய பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட் செலவானதில் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு லாபத்தில் சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, அதை சரி கட்ட மீண்டும் விஜயின் கால்ஷீட்டை கேட்டு காத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.
இதற்கு விஜய் சம்மதம் கூறினாலும் அட்லீதான் அப்படத்தை இயக்க வேண்டும் என கறார் காட்டி ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய். மீண்டும் அட்லியா என அதிர்ந்து போன ஏஜிஎஸ் நிறுவனம் இதுபற்றி விஜயிடம் பேசியிருக்கிறது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் விஜய், அட்லீ, ஏஜிஎஸ் நிறுவனம் 3 பேரும் ஜூம் மீட்டிங்கில் இதுபற்றி பேசியதாக கூறப்படுகிறது.
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். அடுத்து அவர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அவர் அட்லீ படத்தில் நடிப்பார் எனதெரிகிறது. ஒருபக்கம் அட்லியும் மும்பையில் தங்கியிருந்து ஷாருக்கான் படம் தொடர்பான பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.