More
Categories: Cinema News latest news

விஜயிற்கு இந்த பழக்கமே கிடையாது… பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன்…! அனுஷ்காகே இப்டியா?

Anushka: தளபதி விஜயின் நாயகியான அனுஷ்கா பல நாட்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலி ஷெட்டி படம் ரிலீஸானது. இப்படம் பெரிய ரீச்சை அவருக்கு கொடுக்கவில்லை.

தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்தும், அவரின் ஆஸ்தான நடிகரான விஜய் குறித்து சில விஷயங்கள் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அந்த பேட்டியில் இருந்து, எனக்கு சினிமாவில் கொஞ்ச நாள் ப்ரேக் தேவைப்பட்டது. அதனால் எந்த வாய்ப்பையும் ஓகே செய்யாமல் இருந்தேன்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஹாலிவுட்லயே கூப்பிட்டாங்க!.. கெத்து காட்டிய அட்லி.. மொக்கை பண்ணிய புளூசட்ட மாறன்..

மேலும் விஜயுடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்துள்ளேன். அவர் எப்போதும் அமைதியாக இருப்பார். ஒருமுறை என் உச்சி மண்டையில பாடல் படப்பிடிப்புக்கு சென்று இருந்தேன். நடன இயக்குனர் ஆடிக்காட்டியதை அமைதியாக அமர்ந்து விஜய் பார்த்து கொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: சரத் என்னை விடவே மாட்டார்… ஆனால் பிரபு கூட வேற மாதிரி!… சீக்ரெட் சொன்ன அபிராமி!

ஷாட் ரெடி எனக் கூறியவுடன் எழுந்து வந்து அச்சு பிசிராமல் ஆடி முடித்தார். எனக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. எப்படி ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே ஆடினார் என்பது எனக்கு இன்று வரை புரியவில்லை. பெரும்பாலும் விஜய் டான்ஸில் ரீடேக் வாங்கும் பழக்கமே இல்லாதவர். அவ்வளவு அருமையாக ஆடினார் எனவும் கூறினார்.

இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உண்மையாகவே வெயிட் போட்ட அனுஷ்கா தன்னுடைய அடுத்தடுத்த படங்களுக்கு மீண்டும் பழய நிலைமைக்கு வர இயலவில்லை. இருந்தும் யோகாவால் தான் குறைப்பேன். இதற்காக ஆபரேஷன் செய்து கொள்ளும் ஐடியா தனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

Published by
Akhilan