விஜய் 'அந்த' விஷயத்தை கேட்பார்.! தயங்காமல் சொல்லுவேன்.! ரகசியத்தை போட்டுடைத்த 'அந்த' பிரபலம்.!

by Manikandan |   ( Updated:2022-05-04 12:28:04  )
விஜய் அந்த விஷயத்தை கேட்பார்.! தயங்காமல் சொல்லுவேன்.! ரகசியத்தை போட்டுடைத்த அந்த பிரபலம்.!
X

தமிழ் சினிமாவில் என்ன, இந்திய சினிமா அனைத்திலும் கூட ஒரு படத்தின் வெற்றி சில வருடங்களுக்கு முன்பு வரையில் ஓர் படத்தின் வெற்றி, அந்த திரைப்படம் தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை கொண்டு தான் கணக்கிடப்படும். தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

முன்பு , தங்கள் படத்தை ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்களுக்கு போன் செய்து இந்த பட ரிசல்ட் எப்படி வந்திருக்கிறது என கேட்பர். அதே போல நேரில் விசிட் அடித்து தனது பட ரிசல்ட் எப்படி இருகிறது என்பதை பார்க்கவும் செய்துவிடுவர்.

vijay1_Cine

இது பற்றி சினிமா விநியோகிஸ்தர், பைனான்சியர் திருப்பூர் சுப்ரமண்யம் கூறுகையில், ' பலரும் என்னிடம் கேட்பார். குறிப்பாக விஜய். விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எனக்கு நெருக்கமானவர். அதனால், விஜயும் எனக்கு நல்ல பழக்கபட்டவர்.

இதையும் படியுங்களேன் - அந்த ரூமில் இருந்து எம்.ஜி.ஆர் வந்தார்., ஆடி போயிட்டேன்.! மூத்த நடிகர் கூறிய தகவல்.!

படம் ரிலீஸ் ஆனவுடன், விஜய் எனக்கு நேரடியாக போன் செய்து என்னிடம் கேட்பார். படத்தின் ரிசல்ட் எப்படி வந்துள்ளது என்பதை தயங்காமல் போன் போட்டு கேட்பார். நானும் உள்ளதை மறைக்காமல் சொல்லிவிடுவேன். ஆனால் அது முன்னாடி, தற்போதெல்லாம் அப்படி யாருமே கேட்பது இல்லை. என அவர் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Next Story