latest news
ரஜினியை சந்தித்த சீமான்… விஜய் அரசியலுக்குள் இறங்கி அதிரடி காட்டியதுதான் காரணமா?
2017 மே மாதம் சென்னையில் ரஜினியை சந்தித்த ரஜினி சிஸ்டம் கெட்டுப் போய் உள்ளது என்றார். கலைஞர் மறைந்ததும் தான் அரசியலுக்கு வர உள்ளதாக ரஜினி அறிவித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே தீருவேன் என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி இடப்போவதாகவும் அறிவித்தார். அப்போது சீமான், தமிழர் அல்லாத வேறொருவர் ஆட்சிக்கட்டிலுக்கு ஆசைப்படுவதா என கேள்வி எழுப்பினார்.
சீமான் ஆவேசம்
Also read: விவாகரத்துக்கு பிறகு முதன்முதலாக வீடியோ வெளியிட்ட ஏ.ஆர் ரகுமான்!.. என்ன சொல்லிருக்காரு தெரியுமா?!…
நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானும் பாவேந்தர் பாரதிதாசனின் ‘எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே, எங்கு பிறப்பினும் அயலான் அயலானே’ என்றும் பாட்டைப் பாடி தன் ஆவேசத்தைக் காட்டினார். ரஜினி அரசியலுக்குள் இறங்கப் போகிறார் என்றதும் பல்வேறு கட்சியினர் மத்தியில் அது பரபரப்பாகப் பேசப்பட்டது. அதுவரை சந்தித்து இராத பல பிரச்சனைகளை ரஜினி சந்தித்தார். அதன்பிறகு 2020ல் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரும் எண்ணத்தைத் தவிர்த்தார்.
காக்கா கழுகு கதை
ஆனாலும் திரையுலகில் பல மடங்கு வேகம் எடுக்க ஆரம்பித்தார். குறிப்பாக சூப்பர்ஸ்டார் நாற்காலி பிரச்சனையில் காக்கா கழுகு கதை எல்லாம் அரங்கேற்றம் நடந்தது. விஜய்க்கும், ரஜினிக்கும் இடையே பெரிய பனிப்போரே நடந்தது. அதன்பிறகு விஜய் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார்.
பூச்சாண்டி காட்டுற வேலை
அரசியலுக்கு வருவேன் வருவேன் என்ற பூச்சாண்டி காட்டுற வேலை எல்லாம் நம்ம கிட்ட கிடையாதுன்னு சூசகமாக ரஜினியைத் தாக்குவது போல இருந்தது. சீமானும் அவரை தம்பி தம்பின்னு சொல்லி அவர் அரசியலுக்கு வருவதில் தவறே கிடையாது என்று உரிமையோடு பேசினார். தொடர்ந்து மாநாட்டில் விஜய் பேசுவது அவருக்கு முரணாகப் பட்டது.
விஜய் வாழ்த்து
திராவிடமும், தமிழ்தேசியமும் எனது இரு கண்கள் என்ற விஜயின் கொள்கை தனக்கு முரணாக உள்ளது என்பதால் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானும் அவரைக் கடுமையாக சாடினார். தொடர்ந்து சீமானின் ஆதரவு வாக்குகள் அனைத்தையும் விஜய் பிடித்து விடுவார் என்றும் பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அதனால் தான் விஜயை சீமான் கடுமையாகச் சாடுகிறார் என்றும் சொல்லப்பட்டது.
ரஜினி சந்திப்பு
Also read: AR.Rahman: மூத்த மகளிடம் ஏ.ஆர்.ரகுமான் சொன்ன வார்த்தை… அவரைப் போய் தப்பா பேசுறாங்களே..!
அதன்பிறகு கூட சீமானின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து சொல்லித் தனது பெருந்தன்மையைக் காட்டினார். இந்த நிலையில் சீமான் நேற்று இரவு ரஜினியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்ததாம். தற்போதைய அரசியல் நிலவரத்தைப் பற்றி பேசச் சொல்லி இருப்பார் என்றும், தனக்கு ஆதரவு கேட்டு சீமான் போய் இருப்பார் என்றும் நெட்டிசன்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.