Categories: Cinema News latest news

தயவு செய்து ‘ஜெய்லர்’ படத்தை பத்தி தப்பா எதுவும் பேசிறாதீங்க! தியேட்டரில் நடந்த அசாம்பாவிதம்

ஜெய்லர் படம் ரிலீஸாகி ஒட்டுமொத்த ஆடியன்ஸ்களையும் தன் பக்கம் இழுத்திருக்கிறார் ரஜினி. ஆனால்vஇ ரஜினியோ என்ன நடந்தாலும் அது நல்லதுக்கே என்ற எண்ணத்தில் இமயமலை சென்று விட்டார். அவர் மட்டும் இன்று சென்னையில் இருந்திருந்தால் ஒட்டுமொத்த ரசிகர்களும் அவர் வீட்டின் மீது தவமாய் தவம் கிடந்திருப்பார்கள்.

ஆனால் இமயமலை போன ரஜினி மீண்டும் திரும்பி வரும் போது ஒரு கண்டிப்பான வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்தளவுக்கு ஜெய்லர் திரைப்பம் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. 70 வயதிலும் இப்படி ஒரு  மாஸான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க : ஜெயிலர் விமர்சனம்: டார்க் காமெடி கொஞ்சம்.. கொலவெறி ஆக்‌ஷன் அதிகம்.. ஆனால், கதை?

படத்தை பார்க்க பல பிரபலங்கள் வந்திருந்த நிலையில் தனுஷ் முதல் ஆளாக வந்து ஜெய்லர் திரைப்படத்தை பார்த்து தம்ஸ் அப் செய்து விட்டு சென்றார். இப்படி எல்லா ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது ஜெய்லர் திரைப்படம்.

ஆனால் ஒரு தியேட்டரில் ஜெய்லர் திரைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் படம் நன்றாக இல்லை என பேட்டி கொடுத்துக் கொண்டிருக்க ரஜினி ரசிகர்கள் சில பேர் சேர்ந்து அவரை கும்மு கும்மு என்று தியேட்டர் வாசல் முன்பே கும்முயிருக்கின்றனர்.

இதையும் படிங்க : படுக்க வா பல லட்சம் தரேன்!.. நடிக்க வாய்ப்பு தரேன்னு சொன்னாங்க!. போட்டு உடைக்கும் ரவுடிபேபி சூர்யா..

அதன் பிறகு தான் தெரிந்தது அவர் விஜய் ரசிகர் என்று. அவர் வேண்டுமென்று சொன்னாரா? இல்ல உண்மையிலேயே அவருடைய கருத்தை சொல்ல வந்தாரா? என தெரியவில்லை. சொன்னது விஜய் ரசிகர் என்று தெரிந்ததும் மொத்தமாக மொத்தியிருக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகின்றது.

Published by
Rohini