ட்ரோல் டூ சூப்பர் ஹீரோ!.. 29 வருடங்களை கடந்த விஜய்.. தெறிக்கும் காமன் டிபி…

Published on: December 3, 2021
vijay
---Advertisement---

எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கிய நாளைய தீர்ப்பு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய். மகனை வைத்து வேறு எந்த தயாரிப்பாளரும் முன் வராத நிலையில் தானே பணம் போட்டு படம் எடுத்தார் எஸ்.ஏ.சி. துவக்கத்தில் சில சொத்துக்களை விற்று கூட அவர் படம் எடுத்துள்ளார்.

VIJAY

அப்பாவின் இயக்கத்தில் மட்டுமே நடித்து வந்த விஜய்க்கு விக்ரமனும், ஆர்.பி.சவுத்ரியும் கை கொடுக்க ‘பூவே உனக்காக’ படம் உருவானது. இப்படத்தின் வெற்றி மற்ற தயாரிப்பாளர்களுக்கு விஜய் மீது நம்பிக்கையை கொண்டு வந்தது. அப்படத்திற்கு பின்னரே விஜயின் மார்க்கெட் உயர்ந்தது. மேலும், பாசில் இயக்கத்தில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ திரைப்படம் அவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளை பெற்று தந்தது.

vijay

அதன்பின் தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்தார் விஜய், பின் மெல்ல மெல்ல ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி சூப்பர் ஹீரோவாகவும் மாறினார்.தற்போது தளபதி விஜயாக மாறி 100 கோடி சம்பளம் பெறும் நடிகராக அவர் மாறியுள்ளார். தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 100 நாட்களை கடந்து விட்டது.

vijay dp

இந்நிலையில், அவர் சினிமாவுக்கு வந்து 29 வருடங்கள் ஆகிவிட்டதை அவரின் ரசிகர்கள் கொண்டாட துவங்கியுள்ளனர். இதற்காக சில காமன் டிபிக்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விமர்சனங்களை தாண்டி மகுடம் சூட்டிக்கொண்டவர் விஜய் என்பது போல் சித்தரித்து உருவாக்கப்பட்ட டிபி பலரையும் கவர்ந்துள்ளது. டிவிட்டரில் இதற்காக #29YearsOfVijayism மற்றும் #29YrsOfVIJAYSupremacy என்கிற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டு டிரெண்டிங் ஆகி வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment