More
Categories: Cinema News latest news

எங்களையே புலம்பவிட்டாரே.. எக்ஸில் ட்ரெண்ட்டாகும் #WakeUp7ScreenLalith.. என்ன பாஸ் பிரச்னை?

Seven Screen Lalith: லியோ படத்தினை தயாரித்து வரும் லலித் தன்னுடைய மற்ற படங்களுக்கு இல்லாமல் இந்த படத்தில் ரொம்பவே பிரச்னைகளை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறார். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் எக்ஸில் #WakeUp7ScreenLalith என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சாண்டி, சஞ்சய் தத் என இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர கூட்டம் நடித்துள்ளனர். இதுவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. அதிலும் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் கான்செப்டில் இந்த லியோ இருக்கும் எனவும் கூறப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

இதையும் வாசிங்க: ஆடியோ லாஞ்ச் போனா என்ன!.. ரசிகர்களை சந்திக்க வரும் விஜய்!.. பெரிய சம்பவத்துக்கு ரெடியாகும் தளபதி…

இப்படத்தில் விக்ரம் கமல், ரோலக்ஸ் சூர்யா நடிப்பார் எனவும் பேச்சுக்கள் அடிப்பட துவங்கி இருக்கிறது. படத்துக்கு எந்த ப்ரோமோஷனும் தொடங்கப்படவே இல்லை. ஆனால் படத்தின் முன்வியாபாரமே 500 கோடியை நெருங்கி இருக்கிறது. லியோ ஆடியோ ரிலீசுக்கு காத்திருக்க ரசிகர்களுக்கு கிடைத்தது என்னவோ பெரிய பல்ப் தான்.

தடாலடியாக தேதி வரும் என எதிர்பார்த்த நேரத்தில் ரத்து எனக் கூறி ஷாக் கொடுத்தனர். இந்நிலையில் படத்தின் டீசரை வெளியிடும் ஐடியாவில் படக்குழு இல்லையாம். அதற்கு பதில் படத்தின் ரிலீஸ் நேரத்தில் ட்ரைலரை வெளியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் எதுவும் இன்னும் நடக்கவே இல்லை. 30 நாட்களும் அப்டேட் எனக் கூறி இருந்த நிலையில் 4 அப்டேட் வரை மட்டுமே ஒழுங்காக கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் சத்தமே இல்லாமல் இருப்பதாக தெரிகிறது.

இதையும் வாசிங்க: எலேய் லோகேஷ் மட்டும் என்ன தக்காளி தொக்கா..! அனிருத் ரொம்ப சீக்கிரத்தில் போட்ட பாட்டு இதானா…

இதனால் காண்டான விஜய் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் #WakeUp7ScreenLalith என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதில், எங்களையே புலம்ப விட்டீங்களேப்பா என விஜய் ரசிகர்கள் பலவிஷயங்களை ஷேர் செய்துவருகின்றனர்.

தயாரிப்பு நிறுவனம் தவிர மற்ற அனைவரும் ட்வீட் போடுகின்றனர். இன்னும் 17 நாட்களுக்கு ரிலீஸாக இருக்கும் படத்துக்கு ப்ரோமோஷன் செய்யாமல் என்னதான் வேலை செய்கிறீர்கள் என கடுப்பில் சண்டையை போட்டு வருகின்றனர். லலித் தான் மனசு வைக்கணுமோ!

Published by
Akhilan

Recent Posts