More
Read more!
Categories: Cinema News latest news

தளபதி தரிசனத்தை விட.. லியோ பிளாக் டிக்கெட் பிசினஸ் தான் முக்கியம்!.. விஜய் ரசிகர்களா இப்படி?..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள நியூ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இசை வெளியிட்டு விழாவிற்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதாக அதிர்ச்சிகரமான சில ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜயின் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை காண மற்ற ரசிகர்களே அதிக பணம் கொடுத்து பார்க்க ரெடியாக உள்ள நிலையில், டிக்கெட் கிடைத்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அந்த டிக்கெட்டை அதிகபட்சமாக 5000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பிளாக்கில் விற்பனை செய்வதாக அதிர்ச்சி தகவல்கள் தற்போது ஆடியோ வடிவில் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஸ்மைலி பந்தை வைத்து இப்படியும் பயமுறுத்த முடியுமா?.. திகிலை கிளப்பிய ஜெயம் ரவியின் இறைவன் சீன்!..

ஏற்கனவே ஏ ஆர் ரகுமான் இசைக்கச்சேரி நிகழ்ச்சியில் டிக்கெட் குளறுபடிகள் நடைபெற்ற நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அதுபோல போலி டிக்கெட்டுகள் பிரச்சனை உருவாகும் என தகவல்கள் கசிந்துள்ள நிலையில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் சிலர் இதுபோல டிக்கெட்டுகளை அதிக தொகைக்கு விற்கலாமா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா எந்த ஒரு பெரிய ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியான முறையில் அதற்கான செட் அமைக்கும் பணிகள் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகின்றன. அதன் காட்சிகளும் தற்போது புகைப்படங்களாக இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: பப்ளிசிட்டி தேடுவதில் தலைவரும், சிஷ்யனும் ஒன்னுதான்!.. மீண்டும் ரஜினியை சீண்டும் புளுசட்ட மாறன்….

தயாரிப்பாளர் லலித் குமார், ஜெகதீஷ் உள்ளிட்டோர் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் லியோ இசை வெளியீட்டு வேலைகளை தீவிரமாக பார்த்து வரும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

இசையமைப்பாளர் அனிருத் இன்னமும் செகண்ட் சிங்கிளை ரெடி செய்யாமல் தாமதித்து வரும் நிலையில், தான் லியோ படக்குழு ரொம்பவே அப்செட் ஆகியிருப்பதாகவும், அனிருத் எப்படியாவது கடைசி நேரத்திற்குள் முடித்து தருகிறேன் என உறுதியளித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

 

 

Published by
Saranya M

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

44 mins ago
  • Cinema News
  • Entertainment News
  • latest news

Vishal: ஓடிடிக்கு ஓடி வந்த ரத்னம்… ரிலீஸ் எப்போன்னு பாருங்க!

விஷாலின் நடிப்பில்…

1 hour ago