More
Categories: Cinema News latest news

ஜெயிலர் படம் வொர்ஸ்ட்!.. ஃபேக் ஐடியில் வன்மம் காட்டும் விஜய் ரசிகர்கள்.. இதெல்லாம் ஒரு பொழப்பா!…

பொதுவாக கடந்த பல வருடங்களாகவே விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களுடன் மட்டும்தான் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டு வந்தார்கள். தற்போது விஜய் தொடர்பாக எதிர்மறையான கருத்தை யார் தெரிவித்தாலும் சரி அவர்கள் எல்லோருடனும் சண்டை போட துவங்கிவிட்டனர்.

சமீபத்தில் கிளம்பிய சூப்பர்ஸ்டார் பஞ்சாயத்து விஜய் ரசிகர்களை அதிகமாக கோபப்படுத்திவிட்டது. வாரிசு படம் வெளியாவதற்கு முன் அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ‘இனிமேல் விஜய்தான் சூப்பர்ஸ்டார்’ என கொளுத்திபோட அது பற்றி எறிய துவங்கியது. தில் ராஜு சொன்னது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

Advertising
Advertising

இதையும் படிங்க: விஜய் நினைக்கிறதே வேற!.. இதுக்கு பின்னாடி இருப்பது அந்த நடிகராம்!.. அட யோசிக்கவே இல்லையே!…

எனவே, ரஜினி ரசிகர்கள் சொல்லும் ‘தலைவர்தான் எப்போதும் சூப்பர்ஸ்ட்டார்.. சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினி மட்டுமே’ என்கிற கருத்தை விஜய் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதோடு, ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ‘இவன் பேரை பறிக்க 4 பேரு. இவன் பட்டத்த தூக்க நூறு பேரு’ என்கிற வரி அவர்களை மேலும் கோபப்படுத்தியது.

அதை விட முக்கியமாக ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன பருந்து – காக்கா கதை அவர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. ரஜினி பொதுவாகத்தான் அந்த கதையை சொன்னார். ஆனால், விஜயைத்தான் அவர் சொல்லிவிட்டார் என அவர்கள் பொங்கினர். சமூகவலைத்தளங்களில் ‘ஜெயிலர் படத்தை காலி செய்வோம்’ என பல விஜய் ரசிகர்கள் சபதம் போட்டனர்.

இதையும் படிங்க: தள்ளுங்க.. தள்ளுங்க! ‘ஜெய்லரை’ பார்க்க ஓடிவந்த மில்லர் – தலை தெறிக்க ஓடிவரும் தனுஷ்

இந்நிலையில், ஜெயிலர் படம் இன்று வெளியாக பாஸிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பதை தாங்கிகொள்ள முடியாத சில விஜய் ரசிகர்கள், தங்களின் டிபியில் ஜெயிலர் பட இமேஜை வைத்துக்கொண்டு ரஜினி ரசிகர்களே சொல்வது போல் ‘படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மிகவும் மொக்கையாக் இருக்கிறது. படம் வொர்ஸ்ட்.. செம போர்.. ரஜினிக்கு அடுத்த தோல்வி’ என்றெல்லாம் எதிர்மறையாக பதிவிட்டு வருகின்றனர்.

ஒருபக்கம், ஜெயிலர் படம் வெளியாகும் தியேட்டர்களில் ‘லியோ லியோ’ என கத்துவதும், ஒருபக்கம் டிவிட்டரில் #Beast என்கிற ஹேஷ்டேக்கையும் அவர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர். ஆனாலும் இது எல்லாவற்றையும் தாண்டி #ThalaivarNirandharam, #ALL TIME RECORD, #Jailer #Nelsondilipkumar #JailerFDFS போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி வருகிறது.

வன்மத்துடன் விஜய் ரசிகர்கள் செய்யும் இந்த வேலை பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: எஸ்.ஏ.சி-யிடம் விஜய் வைத்த வேண்டுகோள்.. அப்பா மீது இவ்வளவு பாசமா?.. இவர போயா அடிக்கிறீங்க!…

Published by
சிவா

Recent Posts