Connect with us

Cinema News

அவன் மட்டும் என் கையில கிடைச்சா அவ்ளோதான்!.. கலாநிதிமாறனை கெட்ட வார்த்தையில் திட்டிய விஜய் ரசிகர்கள்!

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினிகாந்தின் ஃபேன் பாய் போலவே பேசிய பேச்சு விஜய் ரசிகர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் விஜய்யை வைத்து சன் பிக்சர்ஸ் தயாரித்த பீஸ்ட் படத்துக்கு இதுபோல பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவையே கலாநிதி மாறன் தவிர்த்து விட்டார்.

வெறும் நடிகர் விஜய்யையும் இயக்குநர் நெல்சனையும் வைத்து சன் டிவியில் நேருக்கு நேர் என ஒரே ஒரு பேட்டி வீடியோவை மட்டுமே நடத்தியிருந்தார். ஆனால், ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்துக்காக பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவை கலாநிதி மாறன் நடத்தியதே விஜய் ரசிகர்களை காண்டாக்கிய நிலையில், அவர் பேசும் பேச்சை கேட்டு விஜய் ரசிகர்கள் அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தையில் திட்டிய வீடியோக்கள் எல்லாம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

கலாநிதி மாறன் பேச்சு:

இந்தியாவிலேயே ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான். சிலர், சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்படலாம். அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். ரஜினிக்கு இப்போ 72 வயசாகுது, அந்த வயதில் அவரைப் போல வேகமாக நடக்க முடியுமா, நடிக்க முடியுமா, உங்களை நம்பி ஒரு பெரிய தயாரிப்பாளர் படத்தை கொடுப்பாரா? அப்படி செய்தால், அப்போ ஆசைப்படுங்க இந்த சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு என விஜய் ரசிகர்களுக்கு சவுக்கடி பதிலை கூறி விட்டார் கலாநிதி மாறன்.

மேலும், ரஜினிகாந்துக்கு போட்டி தளபதி என நிறுத்தி விட்டு, தளபதி விஜய் சொன்னது போல ரஜினிகாந்துக்கு போட்டி சிவாஜி ராவ் தான் என அதிரடியாக பேசியுள்ளார். ரஜினிகாந்த் ரெக்கார்டு பிரேக்கர் கிடையாது, அவர் ரெக்கார்டு மேக்கர் என்று பேசி மீண்டும் மீண்டும் விஜய்க்கு பதிலடி கொடுப்பது போலவே கலாநிதி மாறனின் பேச்சு வெளிப்படையாக இருந்த நிலையில், ஜெயிலர் ஆடியோ லாஞ்சுக்கு சென்று என்ன தான் நடக்குது என போய் பார்த்த விஜய் ரசிகர்கள் கடுப்பாகி விட்டனர்.

தளபதியை பத்தி தப்பா பேசுறான்:

ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் இருந்து பயங்கர கடுப்பாக வெளியே வந்த விஜய் ரசிகரிடம் யூடியூப் சேனல் ஒன்று மைக்கை நீட்ட அவன் மட்டும் தனியா என் கையில கிடைச்சா அவ்ளோ தான் என்றும் தளபதி பத்தி தப்பான் பேசுறான், தளபதி அரசியலுக்கு வரமாட்டாராம் என கலாநிதி மாறனை கெட்ட வார்த்தைகளால் திட்டி விஜய் ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும், சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் ரசிகர்கள் ரஜினிகாந்தையும் கலாநிதி மாறனையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top