விஜய் ரசிகர்களை அணில் குஞ்சுகளாக்கிய புளூசட்டை மாறன்… செம கலாய் கலாய்ச்சிருக்காரே!

by sankaran v |   ( Updated:2025-05-02 04:05:43  )
vijay bluesatta maran
X

vijay bluesatta maran

Vijay TVK: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சமீபகாலமாக அரசியலில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் பூத் ஏஜெண்டுகள் எப்படி இருக்கணும்னு கோவையில் ரோடு ஷோ நடத்தினார். தொடர்ந்து மதுரை விமான நிலையம் வந்து அங்கிருந்து கொடைக்கானல் சென்றார். செல்லும் வழி எங்கும் ரசிகர்கள் திரண்டு வந்தனர். ஆனால் அமைதி இல்லை. ஆர்ப்பாட்டமே ஜாஸ்தி. இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் பதிவுகளாகப் போட்டுத் தாளித்து எடுத்துள்ளார்.

நான் மதுரைக்கு வரும்போது என் வாகனத்தைப் பின் தொடராதீர்கள். ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டாதீர்கள். பைக்கில் நின்றபடி வரவேண்டாம் என விஜய் கூறினார். ஆனால், ஒரு தடவை முடிவு பண்ணிட்டா உங்க பேச்சை நாங்களே கேட்க மாட்டோம் என நிரூபித்த அணில் குஞ்சுகள் என்று புளூசட்டை மாறன் பொளந்து கட்டி இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதற்கான வீடியோவையும் போட்டுக் காட்டியுள்ளார். அந்த வீடியோவில் ரசிகர்களை விஜய் எதை எதை எல்லாம் செய்யக்கூடாதுன்னு சொன்னாரோ அதை எல்லாம் செய்து இருக்கிறார்கள்.

இது மட்டும் பத்தாது என்று கோவை விமான நிலையத்திற்கு அடுத்து இன்று மதுரை விமான நிலையத்தைக் கலீஜ் ஆக்கிய தற்குறிகள். பெற்றோர்கள் உழைப்பில் வாங்கித் தந்த செருப்புகள் கணிசமாக ரோட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறது. சினிமா நடிகரைக் காண வெறிபிடித்து அலையாமல் அமைதியாகப் பார்த்தால் என்ன கேடு என்று ஒரு வீடியோவைப் போட்டுள்ளார். அதில் பேரிகார்டு சேதமாகியும், செருப்புகள் ரோட்டில் சிதறியும் ஏதோ பெரிய கலவரம் வந்த இடம்போல காட்சி அளிக்கிறது.

விஜய் தனது கடைசி படமான ஜனநாயகனில் மும்முரமாக இருக்கிறார். இதற்கிடையே இந்தப் படமே கடைசி என்று அறிவித்து விட்டதால் அரசியலிலும் கடின உழைப்பைப் போட்டு வருகிறார். அவரைப் பொருத்தவரை 2026 சட்டமன்றத் தேர்தலில் களம் காண வேண்டும். முதல்வர் நாற்காலியைப் பிடிக்க வேண்டும். ஆனால் அதற்கு அவரது ரசிகர்கள் தொண்டர்களாக வேண்டும். தொண்டர்கள் என்றால் தலைவரின் பேச்சைக் கேட்க வேண்டும். ஆனால் அவர் பேச்சையே கேட்க மாட்டேங்குறாங்களே. என்ன செய்வது? தலைமை நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கான வீடியோவைக் காண:

Next Story