கோட் டிரெய்லர் அப்டேட் எப்பதான் சொல்லுவீங்க!.. கடுப்பாகி கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்!...
Goat Trailer: மங்காத்தா, மாநாடு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் கோட். இந்த படத்தில் தந்தை - மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார். இதில், மகன் விஜயை ஹாலிவுட்டில் பயன்படுத்தி வரும் ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையாக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு.
சமீபத்தில் இது தொடர்பான ஒரு பாடலும் வெளியானது. அதில் விஜயின் தோற்றம் நக்கலும் அடிக்கப்பட்டது. அஜித் ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவில் இருந்த விஜயின் முகத்தை ட்ரோல் செய்தனர். இதுவரை இப்படத்தின் 3 பாடல்கள் வெளிவந்திருக்கிறது. ஆனால், ரசிகர்களை கவரவில்லை.
பீஸ்ட், வாரிசு, லியோ போல இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் படம் வெளியானால் இது மறைந்து போகும் என நம்புகிறார்கள். இந்த படத்தின் கதை என்ன என்பவதை பேட்டி ஒன்றில் சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு.
ரா அமைப்புடன் இணைந்து வேலை செய்யும் ஒரு குழு முன்பு செய்த ஒரு விஷயத்திற்காக பின்னாளில் சந்திக்கும் பிரச்சனைதான் கோட் படத்தின் கதை என அவர் சொல்லி இருக்கிறார். இதைத்தொடர்ந்து ‘இது எந்த ஹாலிவுட் படம்?’ என கேட்டு நெட்டிசன்கள் ஒருபக்கம் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இதுவரை இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகவில்லை. படத்தின் ரிலீஸ் செப்டம்பர் 5 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு 10.30 மணி ஆகியும் அது தொடர்பான அப்டேட் வெளியாகவில்லை என்பதால் விஜய் ரசிகர்கள் அப்செட் ஆனார்கள்.
ஆனால், விரைவில் வரும் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். இதில் கடுப்பான விஜய் ரசிகர்கள் ‘ஏப்பா ஒரு அப்டேட் கொடுக்க 3 அப்டேட்டா?’ எனக்கேட்டு இயக்குனர் வெங்கட்பிரபுவையும், தயாரிப்பாளார் அர்ச்சனா கல்பாத்தியையும் நக்கலடித்து வருகிறார்கள்.