Cinema News
லியோ ஆடியோ லான்ச்தான் இல்ல!.. இதையாவது செய்யுங்க ப்ளீஸ்!.. கதறும் விஜய் ஃபேன்ஸ்…
Leo audio launch : தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய்க்கு ஏராளமான அதேநேரம் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் விஜயின் படங்கள் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்தின் வியாபாரமும் சூடு பிடித்துள்ளது.
அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் இந்த படத்துக்காக விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். அதேபோல், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காகவும் காத்திருந்தார்கள். வருகிற 30ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது.
இதையும் படிங்க: பஞ்சாயத்தே வேணாம்!. லியோ இசை வெளியீட்டு விழா ரத்து!.. உண்மையான காரணம் இதுதானா?!…
ஆனால், திடீரென நேற்று இரவு இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நிறைய பேர் டிக்கெட் கேட்பதாகவும், பாதுகாப்பு காரணம் கருதி இந்நிகழ்ச்சி ரத்துசெய்யப்படுவதாகவும், இதற்கு பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் எதுவுமில்லை எனவும் தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், அதில் சில சந்தேகங்களும் நீடிக்கிறது.
விஜயை பொதுவெளியில் அதிகம் பார்க்க முடியாது. விமான நிலையத்தில் பார்க்கலாம். இல்லையேல் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பார்க்கலாம். அல்லது, அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்தால் சில புகைப்படங்கள் வெளியாகும் அவ்வளவுதான்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் அந்த டார்ச்சரை அனுபவித்தேனா?.. நித்யா மேனன் வெளியிட்ட ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!..
அதனால்தான், விஜய் ரசிகர்கள் அவர் நடிக்கும் படங்கள் தொடர்பான இசை வெளியீட்டு விழாவை பெரிதும் விரும்புகிறார்கள். ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் விஜயை சில மணி நேரங்கள் பார்க்கலாம். குட்டி கதையெல்லாம் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். குறிப்பாக, ஜெயிலர் பட ஆடியோ விழாவில் ரஜினி பேசியதற்கு விஜய் இந்த மேடையில் பதிலடி கொடுப்பார் என்றெல்லாம் அவரின் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். ஆனால், இப்போது அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டது.
விஜயை பார்க்க முடியாதா என ஏங்கும் அவரின் ரசிகர்கள் ‘பீஸ்ட் படம் உருவான போது விஜயை நெல்சன் பேட்டி எடுப்பது போல் வீடியோ வெளியிட்டது போல, லோகேஷ் கனகராஜ் – விஜயை வைத்து வீடியோவை உருவாக்கி டிவியிலோ அல்லது யுடியூப் சேனலியோ வெளியிடுங்கள்’ என சமூகவலைத்தளங்களில் கதறி வருகின்றனர். அதாவது, லியோ ரிலீஸுக்கு முன் விஜயின் முகத்தை பார்க்கவும், அவர் பேசுவதை கேட்கவும் அவர்கள் ஆசைப்படுகின்றனர்.
தயாரிப்பாளர் தரப்பு இதை செய்யுமா?.. விஜய் இதற்கு சம்மதிப்பாரா? என்பது தெரியவில்லை!.
இதையும் படிங்க: ஸ்மைலி பந்தை வைத்து இப்படியும் பயமுறுத்த முடியுமா?.. திகிலை கிளப்பிய ஜெயம் ரவியின் இறைவன் சீன்!..