எனக்காக அத எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துருக்காரு விஜய்!...தந்தையின் உருக்கமான பேச்சு!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்க லோகேஷும் அடுத்ததாக விஜயை வைத்து இயக்க தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி பரபரப்பான சூழ்நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் நடிகர் விஜயை பற்றி அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஏற்கெனவெ இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.
இதையும் படிங்கள் : எல்லா கோட்டையும் அழி… புரோட்டா சூரி போல் முடிவெடுத்த பாலா… உச்சக்கட்ட காண்டில் சூர்யா…
அதையையே சந்திரசேகர் இன்னிக்கு நாங்க அடிச்சுக்குவோம், நாளைக்கு நாங்க கட்டிபிடிச்சுக்குவோம் உங்களுக்கு எதுக்கு இதெல்லாம் என்று நிரூபரிடம் கேட்டார். மேலும் எங்கள் இருவருக்குமே நிறைய கோவம் வரும். நானும் அதிகமாக கோவப்படுவேன், விஜயும் நிறைய கோவப்படுவார்.ஏனெனில் அவர் என் பிள்ளை அல்லவா? என்று உணர்ச்சியோடு கூறினார்.
இதையும் படிங்கள் : கமல்ஹாசன்-விஜயகாந்த் இணைந்த ஒரே திரைப்படம்… இரு நட்சத்திரங்கள் கைக்கோர்த்த சுவாரசிய சம்பவம்…
மேலும் இருவருமே விட்டுக் கொடுத்து போகக்கூடியவர்கள் தான். நான் அவருக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்திருக்கிறேன். அவரும் எனக்காக நிறைய விஷயங்களை விட்டுக் கொடுத்திருக்காரு, எதெல்லாம் முடியாதோ அதெல்லாவற்றையும் எனக்காக விட்டுக் கொடுத்திருக்காரு. அவற்றை எல்லாம் வெளிப்படையாக என்னால சொல்லமுடியாது. ஆனால் விஜய் மாதிரி ஒரு தங்கமான புள்ளையை இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று ஒரு அப்பாவாக உணர்ச்சியோடு கூறினார் சந்திரசேகர்.