Actor Rajini: சமீப காலமாக பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆன மாணிக்கம் நாராயணன் பல நடிகர்களை பற்றிய அவருடைய அனுபவங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். குறிப்பாக அஜித்தை பற்றி காரசாரமான கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அஜித் தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் அவரெல்லாம் ஒரு மனுசனா என்றெல்லாம் கண்டபடி பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதேபோல கார்த்திக்கை பற்றியும் சமீபகாலமாக பேசிக் கொண்டு வருகிறார். அதாவது கார்த்திகை வைத்து சீனு என்ற படத்தை தயாரித்த மாணிக்கம் நாராயணன் அந்தப் படத்தில் கார்த்திக் சரிவர சூட்டிங் வராமல் இருப்பது கையில் ஊசியை போட்டுக் கொண்டு படுத்து கிடப்பது என பல விமர்சனங்களை முன் வைத்துக்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: ரஜினியிடம் நடிகைக்கு இருந்த 43 வருட பகை!. கடைசி வரைக்கும் நடக்காமலே போயிடுச்சே!..
இந்த நிலையில் நடிகர் விஜய் பற்றிய ஒரு சுவாரசியமான தகவலை மாணிக்கம் நாராயணன் கூறியிருக்கிறார். மாணிக்கம் நாராயணன் வடிவேலுவை வைத்து இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பதற்காக நடிகர் விஜயை சிறப்பு விருந்தினராக அழைக்க நினைத்தாராம் மாணிக்கம் நாராயணன். அவர் நினைத்ததை போலவே விஜயும் அந்த விழாவிற்கு வர ஒப்புக் கொண்டிருக்கிறார்.
விஜயுடன் சேர்ந்து சூர்யாவும் அந்த விழாவிற்கு வந்தால் விழா இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதற்காக சூர்யாவிடம் சென்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் வர சம்மதித்திருக்கிறார். அதனால் நீங்களும் கண்டிப்பாக வரவேண்டும் என விஜய் பேரை வைத்து சூர்யாவையும் அழைத்து இருக்கிறார் மாணிக்கம் நாராயணன். சூர்யாவும் வர சம்மதம் கொடுத்திருக்கிறார். ஆனால் திடீரென விஜய் தரப்பிலிருந்து அந்த விழாவிற்கு விஜயால் வர முடியாது எனவும் தங்களுக்காக கால் சீட் வேண்டுமென்றால் கொடுக்கிறேன் ஆனால் இசை வெளியீட்டு விழாவிற்கு வர முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க: மேடையிலே இளையராஜாவை கலாய்த்த சூப்பர்ஸ்டார் மற்றும் உலகநாயகன்… அப்படி போடு!
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணிக்கம் நாராயணன் விஜய் வரவில்லை என்றால் சூர்யாவும் வரமாட்டார் என நினைத்து மிகவும் வருத்தத்தில் இருந்தாராம். அந்த நேரத்தில் சூர்யாவின் மேலாளராக இருந்த தங்கதுரை கண்டிப்பாக இந்த விழாவிற்கு சூர்யா வருவார் என மாணிக்கம் நாராயணனை தேற்றி இருக்கிறார். இசை வெளியீட்டு விழா சத்தியம் திரையரங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்க திடீரென ஒரு வேன் வந்து நின்றதாம். அதிலிருந்து விஜய் இறங்கினாராம். மாணிக்கம் நாராயணனை பார்த்ததும் நான் விழாவிற்கு வந்து விட்டேன் .இப்பொழுது சந்தோஷமா என கேட்டிருக்கிறார். விஜயை பார்த்ததும் மாணிக்க நாராயணன் மிகவும் கதறி அழுதுவிட்டாராம்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…