More
Categories: Cinema News latest news

கமலின் ஃபார்முலாவை ஃபாலோ செய்யும் விஜய்! வொர்க் அவுட் ஆகுமானு தெரியலயே

Kamal Vijay: சினிமாவை பொறுத்த வரைக்கும் நடிகர்கள் பெரும்பாலும் தன்னுடைய நடிப்பின் காலம் முடிந்த பிறகு அடுத்ததாக தனக்கு எதில் விருப்பமோ அதில் தன் கவனத்தை செலுத்த ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அப்போது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை தன் கவனத்தில் வைத்துக் கொண்டு இதை நாம் முன் நின்று தீர்க்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் அரசியலில் தனது கவனத்தை திருப்புகின்றனர்.

மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் அரசியலில் அவர்கள் நுழைவதில்லை. அரசியலில் மட்டும் இருந்தால்தான் இந்த மாதிரி உதவிகளை செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. அந்த வகையில் கேபிஒய் பாலா, லாரன்ஸ் மற்றும் சில வில்லன் நடிகர்கள் நகைச்சுவை நடிகர்கள் என தங்களால் இயன்ற அளவு ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டு வருகின்றனர்.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஜெண்டர் ரிவீல் பார்ட்டி நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்!.. இர்பான் நிலைமை இப்போ என்ன தெரியுமா?

இவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக விஜய் தனது அடுத்த கட்ட நகர்வை அரசியலை நோக்கி செலுத்த இருக்கிறார். அவருடைய குறிக்கோள் மக்களுக்கு எல்லாம் நல்ல முறையில் சென்றடைய வேண்டும் என்பதுதான். அந்த வகையில் இப்போதிலிருந்து அவர் சில விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் அவர் நேரடியாக அரசியலில் களமிறங்க இருக்கிறார்.

இந்த நிலையில் அவர் ஈவென்ட் மேனேஜ்மென்ட் டீம் என்ற ஒரு டீமை வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அது எதற்காக எனில் அரசியலில் வந்த பிறகு அவர் ஊர் ஊராக பொது பிரச்சாரம் மக்களை சந்திப்பது என இந்த வேலைகளில் பிஸியாக இருப்பார். அப்போது எந்தெந்த ஊர்களுக்கு எல்லாம் அவர் செல்கிறாரோ அங்கு தகுந்த முன்னேற்பாடுகளை செய்வதற்கு என ஒரு டீம் இருக்க வேண்டும். அதை இந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் டீம் தான் பார்த்துக் கொள்ளும். இதை இதற்கு முன் கமல் பயன்படுத்தி வருகிறார். அதற்கு அடுத்தபடியாக அதே மாதிரியான ஒரு டீமை விஜய் வைத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: ஷாரூக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. உடம்பில் இப்படி ஒரு பிரச்சினையா?

Published by
Rohini

Recent Posts