விஜயகாந்த் நேர்ல போயும் வாராத விஜய்!.. இதுதான்நன்றிக்கடனா?

viji
கோடம்பாக்கமே ஒரு நன்றி கடன் பட்டிருக்கிறது என்றால் அது விஜயகாந்திற்காக மட்டும்தான். அந்த அளவுக்கு விஜயகாந்த் சினிமாவில் உள்ள ஏராளமான பேருக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்து இருக்கிறார். அதனாலேயே இன்று வரை விஜயகாந்த் பற்றி பேசாத ஆட்களே இல்லை என்று கூறலாம்.

viji1
எத்தனையோ கலைஞர்களுக்கு விஜயகாந்த் அவரால் முடிந்த உதவிகளை செய்து இருக்கிறார். இந்த நிலையில் இன்று தமிழ் சினிமாவே கொண்டாட கூடிய ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜயின் வளர்ச்சிக்கும் ஒரு விதத்தில் விஜயகாந்த் தான் காரணம்.
அன்று செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் மட்டும் கெஸ்ட் ரோலில் நடிக்காவிட்டால் இன்று விஜயின் நிலையே வேறு மாதிரி இருக்கும் என்று பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஏன் அவருடைய தந்தையான எஸ்ஏ சந்திரசேகர் கூட விஜயகாந்த் மட்டும் அந்த படத்தில் நடிக்கவில்லை என்றால் இன்று விஜயை இந்த அளவுக்கு நாம் பார்த்திருக்க முடியாது என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
ஆனால் பதிலுக்கு விஜய் விஜயகாந்திற்காக என்ன செய்தார் என்று கோடம்பாக்கமே கேள்விகளை எழுப்பி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் நிலையை விசாரிக்க ஒரு தடவை கூட அவர் வீட்டிற்கு சென்று விஜய் பார்க்கவில்லை.

viji2
இந்த நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி இதைப்பற்றி பேசும்போது விஜய்க்கு விஜயகாந்த் அவ்ளோ பெரிய உதவியை செய்திருக்கிறார். ஆனால் அதற்காகவாவது விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனை சினிமாவில் உள்ளே நுழைப்பதற்கு விஜய் ஏதாவது ஒரு ஸ்டெப் எடுத்து வைத்திருக்கலாம். ஆனால் அதை விஜய் செய்யவில்லை என்று கூறினார்.
விஜயகாந்தின் நன்றி கடனை தீர்க்க தன்னுடைய படங்களில் ஏதாவது ஒரு வேடத்திலாவது விஜயகாந்தின் மகனை உள்ளே நுழைத்திருக்கலாம். ஆனால் விஜய் அதை செய்ய தவறிவிட்டார் என்று கூறினார்.

viji3
அது மட்டும் இல்லாமல் சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் விழாவிற்கு கூட விஜயகாந்தும் அவருடைய மனைவி பிரேமலதாவும் விஜயின் வீட்டிற்கே நேரடியாக சென்று பத்திரிக்கை வைத்து அழைப்பு விடுத்தனர் .ஆனால் அந்த விழாவிற்கு கூட விஜய் வரவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.