விஜய் விழாவில் சங்கீதா ஆப்சண்ட்... காரணம் கேட்டதற்கு கேள்வியால் மடக்கிய தயாரிப்பாளர்

by sankaran v |   ( Updated:2024-08-25 11:02:50  )
sangeetha vijay
X

sangeetha vijay

69வது படம் தான் தனது கடைசி படம் என்றும் அதன்பிறகு விஜய் முழுநேர அரசியல்வாதியாக உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்படி விஜய் நடிப்பில் தற்போது 68வது படமாக கோட் வருகிறது. இதை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.

தொடர்ந்து அவரது 69வது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாகவும் அதன்பிறகு முழுநேர அரசியலில் களம் இறங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது 200 கோடி வரை சம்பளம் பெறும் விஜய் இப்படி ஒரு முடிவு எடுப்பது திரையுலகில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரம் அவர் அரசியலுக்கான பணிகளையும் முடுக்கி விட்டார்.

இதையும் படிங்க... என்னது விடுதலை 2 நாலு மணி நேரமா? இந்தியன் 2 டோட நிலைமை வராமப் பார்த்துக்கோங்க

அதன்படி கடந்த 22ம் தேதி அவர் தனது கட்சிக்கொடியையும், கட்சிப் பாடலையும் அறிமுகப்படுத்தினார். அது பெரும் விமர்சனத்திற்குள்ளானது. மனைவி மற்றும் பிள்ளைகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது சர்ச்சையை உண்டுபண்ணியது.

விஜய் தனது கட்சிக்கொடியை அறிமுகப்படுத்தும்போது குடும்பத்தினரை ஏன் வரவழைக்கவில்லை என்றும் அந்த விழாவில் பெற்றோருக்கு மரியாதை செய்ய மறந்து பேசி முடித்ததும் திரும்ப மேடைக்கு வந்து பெற்றோருக்கு நன்றி சொன்னது சலசலப்பை உண்டாக்கியது.

vijay kodi

vijay kodi

இதன் காரணம் என்னவாக இருக்கும் என்பது புரியாத புதிராகவே இருந்தது. அந்த முடிச்சை அவிழ்க்கும் வகையில் பிரபலம் ஒருவர் பதில் தெரிவித்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியேற்று விழாவில் விஜயின் மனைவி சங்கீதா வரலையே. ஏன் அவங்க வரல? இவங்க இரண்டு பேரும் ஒண்ணா தான் இருக்காங்களா? பிரிஞ்சிட்டாங்களா? மறுபடியும் எப்போ ரெண்டு பேரும் ஒண்ணு சேருவாங்க? அப்படின்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

விஜயும், அவரது மனைவி சங்கீதாவும் பிரிந்து விட்டார்கள் என இதுவரைக்கும் எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இல்லை. அப்படி இருக்கும்போது அவர்கள் மீண்டும் சேர்வார்களா என்ற கேள்விக்கு எங்கே இடம் இருக்குன்னு பதில் சொல்லி இருக்கிறார் சித்ரா லட்சுமணன்.

Next Story