மோசம் செய்த கோலிவுட் முன்னணி ஹீரோக்கள்!... பாலிவுட்டில் இருந்து விஜயிற்கு வந்த முக்கிய கால்…

Vijay: நடிகர் விஜய் கோலிவுட்டின் உச்சத்தில் இருக்கும் நிலையில் அவரின் அரசியல் எண்ட்ரியால் பலரும் ஆச்சரியத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஆனால் இதில் சில நடிகர்கள் புகைச்சலில் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கிறது.

பொதுவாக நடிகர்கள் அரசியலுக்கு சென்ற தகவல் வெளியானால் அது பரபரப்புக்கு ஆளாகும். ஆனால் விஜயின் இந்த எண்ட்ரி இந்தியாவிலே முக்கிய செய்தியாக மாறி இருக்கிறது. இதுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அரசியல் அறிவிப்புக்கு பின்னர் அவருக்கு இருக்கும் மக்கள் கூட்டம் அப்பட்டமாக வெளியில் தெரிய தொடங்கி இருக்கிறது.

இதையும் படிங்க: எந்த ரசிகர்களும் இல்லாத ஏரியாவில் தான் நடக்கணும்!… லைகாவை வச்சு செய்யும் அஜித்… சும்மா இருந்து இருக்கலாமோ?

கோட் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் தினமும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூட்டமாக வந்து விஜயை கண்டு செல்கின்றனர். இதனால் பெரிய நடிகர்கள் சிலர் கடுப்பில் இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கிறது. கோலிவுட்டில் இருந்து விஜயிற்கு சில நடிகர், நடிகைகள் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் உச்ச நடிகர்களிடம் இருந்து இதுவரை பொதுவெளியில் எந்த ஒரு வாழ்த்துக்களும் வரவில்லை.

இது ஒருப்புறம் இருக்க, புரோமோஷனே பிடிக்காத அஜித் குறித்து தினமும் ஒரு அப்டேட் தொடர்ந்து புகைப்படத்துடன் ரிலீஸாகி வருகிறது. கண்டிப்பாக இது அஜித்தின் அனுமதி இல்லாமல் நடக்காது. அவரே இதை பிளான் செய்து வெளியிட சொல்வதாக கூட சிலர் கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க: இனிமே நான் நடிக்க மாட்டேன்!.. சிவாஜி படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய பானுமதி…

அந்த வகையில் இன்று அஜித்தின் மகன் அத்விக் ஸ்கூலில் அஜித் கால்பந்து விளையாடும் புகைப்படம் ரிலீஸாகி இருக்கிறது. இது ஒருப்புறம் இருக்க, பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் விஜயிற்கு கால் செய்து அரசியல் எண்ட்ரிக்கு வாழ்த்து தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் ராம்சரண் மனைவி உபாசனா விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தது நல்ல முடிவு தான். சினிமாவில் சாதித்த அவர் அரசியலில் களமிறங்க இதுவே நல்ல தருணம். மக்களுக்காக நல்ல விஷயங்களை கண்டிப்பாக செய்வார் என்று தெரிவித்து இருக்கிறார்.

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்கள் அமைதி காக்கும் நிலையில் மற்ற மொழிகளில் இருக்கும் நட்சத்திரங்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து விஜயின் அரசியல் எண்ட்ரி குறித்து ஆதரவாக பேசி வருவது ஆச்சரியமான விஷயமாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினியை பெருமையாய் பேசப் போய் ரசிகர்களிடம் கிழி வாங்கும் விஷ்ணு விஷால்!… வாய் சும்மா இருக்காதே…

Related Articles
Next Story
Share it