புதுச்சேரியில் பெரிய சம்பவம் செய்யப்போகும் தளபதி!. முதல்வரை சந்திச்சதுக்கு காரணம் இதுதானாம்!.

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். இளைய தளபதியாக இருந்து தளபதியாக மாறியவர் இவர். தமிழ் சினிமாவில் ரஜினிக்கு இருந்ததை போலவே இவருக்கு அதிக ரசிகர் கூட்டம் உருவானது. குறிப்பாக வாலிப வயதில் உள்ள பலரும் விஜயின் ரசிகர்களாக உள்ளனர்.
விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. இப்படத்தில் திரிஷா ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஷாரூக்கானுக்கு ஓகே சொல்லாத த்ரிஷா விஜய்க்கு மட்டும் டபுள் ஓகேவா? இதெல்லாம் ரொம்ப ஓவர்தான்
ஒருபக்கம், விஜய் அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்திருக்கிறார். அதோடு, தனது கட்சி 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் எனவும் சொல்லி இருக்கிறார். எனவே, கட்சி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு பிரத்யோக மொபைல் ஆப்பையும் உருவாக்கியுள்ளனர்.
அதோடு, ஏற்கனவே ஒத்துகொண்ட படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக விஜய் அறிவித்திருக்கிறார். இது திரையுலகினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் இந்த முடிவில் இருந்து மாறுவாரா என்பது 2026 தேர்தல் முடிவுக்கு பின் தெரிந்துவிடும்.
இதையும் படிங்க: அஜித்தின் அடுத்த பட டைட்டில் இதுதானா? புதுசா இருக்கு தல இதெல்லாம்…
நடிகர் விஜய்க்கு தொழில் என்பது நடிப்பு மட்டுமல்ல. பல வியாபாரங்களிலும் அவர் முதலீடு செய்திருக்கிறார். நடிக்க வந்து சில வருடங்களிலேயே ஷோபா திருமண மண்டபம் என்கிற கல்யாண மண்டபத்தை கட்டினார். இது இல்லாமல் லண்டனில் உள்ள அவரின் மாமனருடன் இணைந்து லண்டனில் சில தொழில்களில் அவர் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதோடு, புதுச்சேரி கடற்கரை ஓரமாக ஒரு பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை விஜய் கட்டவிருக்கிறாராம். இதற்கு புதுச்சேரி அரசும் அனுமதி கொடுத்துவிட்டது. இதற்காகத்தான் சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை விஜய் சந்தித்தார். இந்த புகைப்படமும் இணையத்தில் வெளியானது.