சோலிய முடிச்சுருவாங்கே போல! விமான நிலையத்தில் விஜய்க்கு காத்திருந்த அதிர்ச்சி - ‘லியோ’வை காலிபண்ண இதுவே போதும்
Leo Audio Launch: விஜய் இன்று அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். தளபதி68 படத்தின் ஒரு சில பணிகளுக்காக வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாத்தியுடன் அமெரிக்கா சென்ற விஜய் இன்றுதான் சென்னை வந்திறங்கினார். வந்ததும் நேராக தன் அப்பாவை சந்திக்க சென்றார்.
எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இரு தினங்களுக்கு முன்புதான் ஒரு சிறிய சர்ஜரி செய்திருக்கிறார்கள். அவரை நலம் விசாரிக்க நேராக அங்கு சென்றார் விஜய். ஆனால் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் விஜய்க்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படிங்க: என்ன செல்லம் பொசுக்குன்னு காட்டிப்புட்ட!.. வயசு பசங்க மனச கெடுக்கும் திவ்யா துரைசாமி…
அதாவது இன்று பெரும் பேசு பொருளாக பார்க்கப்படுவது சமீபத்தில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை கச்சேரி. அந்த கச்சேரியில் பெரிய குளறுபடிகள் நடந்து பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டும் சில பேர் அடி மிதி எல்லாம் வாங்கியும் பல இன்னல்களுக்கு ஆளானார்கள்.
இந்த இசைக் கச்சேரியை ஒரு தனியார் நிறுவனம் தான் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அதே தனியார் நிறுவனத்திடம் தான் கொடுத்திருப்பதாக விஜயிடம் சொல்லியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ‘ஜெய்லரில்’ நடந்தது யாருக்காவது தெரியுமா? ரஜினியை பற்றி சீமான் ஆவேசம் – அட போங்கடா
விமான நிலையத்திலேயே விஜய் பெரும் டென்சன் ஆகிவிட்டாராம். உடனே சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி உடனே நிறுத்தச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு படத் தயாரிப்பு தரப்பில் இருந்துதான் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்தப் போகிறோம் என்று விஜயிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அதன் பிறகே விஜய் அமைதியாகியிருக்கிறார். ஒரு நாள் நடந்த அந்த இசைக் கச்சேரி. ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் உலுக்கி விட்டது. போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் அந்த இடமே போராட்டக்களமாக மாறியது.
இதையும் படிங்க: நடிகைக்கு மறைமுகமாக சவால் விட்ட பத்மினி!.. பாடல் வரி மூலம் உதவிய கண்ணதாசன்!. அந்த நடிகை அவரா?!..
மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டுமா? அதனால் விரைந்து விஜய் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி சரியான முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறிவருகிறார்கள்.