Cinema News
ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போன விஜய் பட ஷூட்டிங்… தடைகளை தாண்டி ஹிட் அடித்த படத்தின் சுவாரஸ்ய பின்னணி…
கடந்த 1997 ஆம் ஆண்டு விஜய், ஷாலினி, சிவக்குமார், ஸ்ரீவித்யா, தாமு, சார்லி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “காதலுக்கு மரியாதை’. இத்திரைப்படத்தை பிரபல இயக்குனரான ஃபாசில் இயக்கியிருந்தார்.
விஜய் கேரியரிலேயே முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் “காதலுக்கு மரியாதை”. மேலும் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.
தள்ளிப்போன படப்பிடிப்பு
விஜய் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிவந்த திரைப்படம் “ஒன்ஸ் மோர்”. இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசனும் சரோஜா தேவியும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். “ஒன்ஸ் மோர்” திரைப்படத்திற்கு முன்பே விஜய் “காதலுக்கு மரியாதை” திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டார். ஆனால் சிவாஜி கணேசன் மற்றும் சரோஜா தேவி ஆகியோரின் கால் ஷீட் பிரச்சனையிலேயே இருந்தது. ஆதலால் “ஒன்ஸ் மோர்” திரைப்படத்தை முடித்த பிறகுதான் “காதலுக்கு மரியாதை” திரைப்படத்தை தொடங்க முடியும் என்று கூறிவிட்டார்கள்.
மலையாளத்துக்கு போன ஃபாசில்
இந்த நிலையில் இயக்குனர் ஃபாசில், அது வரை தன்னால் காத்திருக்க முடியாது எனவும், இத்திரைப்படத்தை நான் மலையாளத்தில் இயக்கிவிட்டு வருகிறேன் எனவும் தயாரிப்பாளர் சங்கிலி முருகனிடம் கூறிவிட்டு கேரளாவிற்கு சென்றுவிட்டார்.
மலையாளத்தில் “அனியதிப்ராவு” என்ற பெயரில் இத்திரைப்படத்தை இயக்க தொடங்கினார். அதில் குஞ்சக்கோ போபன், ஷாலினி ஆகியோர் நடித்திருந்தனர். அத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது.
ஃபெஃப்சி ஊழியர்கள் ஸ்ட்ரைக்
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து சென்னைக்கு மீண்டும் வந்த ஃபாசில், விஜய்யை வைத்து “காதலுக்கு மரியாதை” திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். அப்போது புதுவிதமான ஒரு பிரச்சனை எழுந்தது. அதாவது ஒரு இயக்குனர் ஃபெஃப்சி சங்க ஊழியரை அடித்துவிட்டார் என்பதால் இயக்குனர் சங்கமும் ஃபெஃப்சியும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டிருந்தார்கள். ஆதலால் படப்பிடிப்பு நடப்பதில் பிரச்சனை எழுந்தது.
இதையும் படிங்க: “உங்க கூட நடிச்சா எங்க மார்க்கெட் குறைஞ்சிடும்”… விவேக்கை ஓரங்கட்டிய போட்டி நடிகர்கள்… அடக்கொடுமையே!!
மீண்டும் கேரளாவுக்குப் போன ஃபாசில்
“காதலுக்கு மரியாதை” திரைப்படத்தின் தயாரிப்பாளர் சங்கிலி முருகன், ஃபெஃப்சி சங்கத்திடமும் இயக்குனர் சங்கத்திடம் பேசிப்பார்த்தார். ஆனாலும் சிக்கல் தீரவில்லை. உடனே “காதலுக்கு மரியாதை” திரைப்படத்தின் படப்பிடிப்பை கேரளாவுக்கு மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கேரள திரைப்பட ஊழியர்களை வைத்து படத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது. அதன் படி படக்குழுவினர் கேரளாவுக்கு பயணித்தனர். அங்கே 98% படப்பிடிப்பை முடித்துவிட்டு அதன் பின் 2% படப்பிடிப்பை சென்னையில் நடத்தினார்களாம். இவ்வாறு பல தடைகளைத் தாண்டி “காதலுக்கு மரியாதை” திரைப்படம் உருவாகியிருக்கிறது.