நம்பாதீங்க விஜய் ரசிகர்களே!.. பீஸ்ட் படத்துக்கு அது இல்லவே இல்லையாம்!...

விஜய் நடிப்பில் தற்போது ரிலீஸ்க்கு ரெடியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.
சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. பூஜா ஹெக்டே, செல்வராகவன் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து அரபிக் குத்து பாடல் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளாது. இந்த பாடல் 140 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படியுங்களேன் - முதலில் சிம்பு, அடுத்து தனுஷ், தற்போது சிக்கியுள்ள நபர் சியான் விக்ரம்.! பகீர் கிளப்பும் பின்னணி தகவல்.!
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும், விஜய் எப்போது மேடையில் பேசுவார், குட்டி கதை எப்போது கூறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பலர் இணையத்தில் இந்த திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மார்ச் 20 ஆம் தேதி நடக்க போகிறது என நேரம், காலம், இடம் எல்லாம் குறித்துவிட்டார்கள்.
ஆனால், உண்மையில், அது சாத்யமில்லையாம். ஆம், மார்ச் 20ஆம் தேதி நடக்க சாத்யமில்லையாம். அதனால், ஏப்ரல் முதல் வாரம் இசைவெளியீட்டு விழாவை நடத்த தான் படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஆதலால் மார்ச் 20 எனும் வீண் வதந்தியை நம்ப வேண்டாம் என விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.