விஜய் சார வைச்சி நீங்க செய்யுங்க.! இவனுகள நான் செய்யுறேன்.! படக்குழு லீக் செய்த பீஸ்ட் புதிய வீடியோ.!

by Manikandan |   ( Updated:2022-03-19 05:53:31  )
விஜய் சார வைச்சி நீங்க செய்யுங்க.! இவனுகள நான் செய்யுறேன்.! படக்குழு லீக் செய்த பீஸ்ட் புதிய வீடியோ.!
X

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக சன் பிக்ச்சர்ஸ் அறிவிக்கவில்லை.

ஏற்கனவே பீஸ்ட் படத்திலிருந்து அரபி குத்து எனும் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி உள்ளது. இணையத்தில் அதனை ரீல்ஸ் செய்யாத பிரபலங்களே இல்லை எனும் அளவிற்கு அப்பாடல் அதிரிபுதிரி ஹிட் ஆகியுள்ளது.

அந்த பாடலை தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் இருந்து இரண்டாவது பாடலான ஜாலியோ ஜிம்கானா எனும் பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது. அதற்கான புரோமோ விடியோ நேற்று முன்தினம் வெளியானது.

இன்று மாலை முழு பாடல் வெளியாகும் வெளியாவதை முன்னிட்டு ஒரு சின்ன வீடியோவை படக் குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த பாடலின் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சில காமெடி நடிகருக்கு நடனம் சொல்லிக்கொடுக்கிறார். ஆனால், அவர் தப்புத்தப்பாக ஆடுகின்றனர்.

beast

இதையும் படியுங்களேன் - நடிகைகைளின் உதட்டில் அப்படி என்னதான் இருக்குதோ.! விஜய் இத செய்யுறது 4வது முறை.!

இதனை கவனித்த இயக்குனர் நெல்சன், நீங்கள் விஜய் சார் வைத்து வேலையை செய்ய ஆரம்பியுங்கள். நான் இவர்களை பார்த்து கொள்கிறேன் எனக் கூறி ரெடின் கிங்ஸ்லி குழுவினரை கூட்டி செல்கிறார். கலகலப்பாக அந்த வீடியோ செல்கிறது.

சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் சின்ன சின்ன சுவாரஸ்யமான விஷயங்களை கூட படத்திற்கான பிரமோஷனாக மாற்றி வரும் இயக்குனர் நெல்சன் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறார். இன்னும் எத்தனை புரோமோ விடியோக்களை அவர் வெளியிடுவார் என்று ரசிகர்கள் படத்தை விட ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story