கே.ஜி.எஃப்-ஆல் பீஸ்ட்டுக்கு வந்த பிரச்சனை..! அதிர்ந்து போன சன் பிக்ச்சர்ஸ்.!

by Manikandan |   ( Updated:2022-03-19 14:10:02  )
கே.ஜி.எஃப்-ஆல் பீஸ்ட்டுக்கு வந்த பிரச்சனை..! அதிர்ந்து போன சன் பிக்ச்சர்ஸ்.!
X

தளபதி விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நெல்சன் இப்படத்தில் இயக்கியுள்ளார்.

முதலில் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யத்தான் திட்டமிட்டு இருந்தார்களாம். ஆனால், அதே தேதியில் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியாகும் என பல மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டது. கே.ஜி.எப் முதல் பாகத்தை பார்த்ததால், அதன் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படமா கே.ஜி.எப்2 திரைப்படமா என கேட்டால் மற்ற ரசிகர்ள் கூட முதலில் பீஸ்ட் என்று தான் கூறுவார்கள். ஆனால் மற்ற மாநிலங்களில் நிலைமை உண்மையில் வேறுதான். அதனை இங்குள்ள விஜய் ரசிகர்கள் கூட ஒத்துக்கொள்ளத்தான் செய்வார்கள்.

கேரளாவில் அதே நிலை தான் நடந்துள்ளது. கேரளாவில் ஏற்கனவே கே.ஜி.எப் 2 திரைப்பட வியாபாரம் முடிந்துவிட்டது. சுமார் 350 திரையரங்கை அப்பட நிறுவனம் கைப்பற்றிவிட்டது. அதன் பிறகு தற்போது பீஸ்ட் திரைப்படத்தை வியாபாரம் செய்த சன் பிக்ச்சர்ஸ்க்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

இதையும் படியுங்களேன் - ரஜினியை முந்திய அஜித்.!? பட்டாசு போட்டு ஒரே கொண்டாட்டம் தானாம்.! என்ன விஷ்யம் தெரியுமா.?!

முதலில் கேரளா தியேட்டர் உரிமைக்கு 10 கோடி விலை பேசப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் 10 கோடி மிக அதிகம் என்று 5.5 கோடிதான் தரமுடியும் என கூற சன் பிக்ச்சர்ஸ் அதிர்ந்து போய் விட்டது. பின்னர் , என்ன செய்வது என தெரியாமல் இருந்த படக்குழு வேறு நிறுவனத்திடம் 8 கோடிக்கு விலை பேசி விற்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த அளவுக்கு வசூலை கேரளாவில் கே.ஜி.எப்-ஐ முந்தி பீஸ்ட் வசூல் செய்யுமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Next Story