Connect with us
Vijay

Cinema History

விஜய் போடும் பக்கா பிளான்… முழுநேர அரசியல் அந்தப் படத்திற்குப் பிறகுதானாம்…! பிரபலம் தகவல்

‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து எங்கு பார்த்தாலும் விஜயின் அரசியல் பற்றித் தான் பேச்சு அடிபடுகிறது. அந்த வகையில் தளபதி விஜய்க்கு கோட் படம் தான் கடைசி படம் என்றும் அதன்பிறகு முழுநேர அரசியலில் இறங்கி விடுவார் என்றும் சமீபத்தில் ஊடகங்களில் பரபரப்பான பேச்சுகள் வந்தன. ஆனால் இது கிடையாது என்று ஒரு பிரபலம் சொல்லி இருக்கிறார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

விஜய்க்கு அவரது பிறந்தநாளையொட்டி 21ம் தேதியை ஒட்டி போக்கிரி படம் ரீ ரிலீஸாகிறது. அப்பவே பெரிய வசூல் சாதனை செய்த படம். சமீபத்தில் தான் கில்லி வந்து வசூலில் சாதனை படைத்தது என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.

இதையும் படிங்க… கமலை வைத்து எம்ஜிஆர் போட்ட மெகா திட்டம்… அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியுமா?

தயாரிப்பாளர் தனஞ்செயன் விஜயின் 69வது படம் குறித்தும், அவரோட முழுநேர அரசியல் குறித்தும் இப்படி தெரிவித்துள்ளார்.

விஜயின் 69வது படம் தான் அவருக்கு அரசியலுக்கு உதவும் வகையில் இருக்கும். எந்த ஒரு பெரிய நடிகரும் தன்னோட படத்துக்கு பெரிய இடைவெளியை விட மாட்டார். 69 படம் தீபாவளிக்கு வரும்னு எதிர்பார்க்கிறேன். அதுல இருந்து ஒரு 6 மாசத்துல எலெக்ஷன். அதுதான் அவருக்கு செட்டாகும்.

தளபதி 69 கண்டிப்பா உண்டு. நிறைய பேரு சொல்றாங்க கேவிஎன் புரொடக்ஷன்னு. அதோட அறிவிப்பு வராம பேச முடியாது. அது டீமோடு தான் பேசப்படும். அதுக்கான அறிவிப்பை தான் நான் எதிர்பார்க்கிறேன்.

இதையும் படிங்க… ஒரு கோடி கொடுத்தும் சம்மதிக்காத ரஜினி!.. மனுஷனுக்கு இப்படி ஒரு கொள்கையா?!…

தளபதி 69 வரலன்னா ரொம்ப கேப் ஆகிவிடும். ரீ ரிலீஸ் பண்ணிதான் நினைவுபடுத்தணும். சினிமா இன்டஸ்ட்ரில எப்படின்னா 3 மாசம் காணாம போனா மறந்துடுவாங்க. 6 மாசம்னா எந்த விதத்திலும் ஞாபகம் வச்சிக்கவே மாட்டாங்க. அதனால அவ்வளவு பெரிய கேப்பை ஒரு ஹீரோ கொடுக்க மாட்டாரு.

அரசியல் பேசறதுக்கான பரபரப்பும் 2025 மத்தியில தான் உண்டாகும். அப்போ தான் விஜயும் அரசியலில் முழுவதுமாக இறங்க சாத்தியப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top